»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்த் திரையுலகில் பெருகி வரும் வன்முறைக் கலாச்சாரத்தைக் கண்டித்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத்தலைவர் கேயார் தலைமையில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்தஉண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி பெற வேண்டி மைலாப்பூர் சாய்பாபா கோவில், அண்ணா சாலை தர்கா,பெசன்ட் நிகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம் ஆகிய இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

சென்னை-செங்கல்பட்டு மாவட்ட விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே.ராஜனின் அடாவடி மற்றும் அராஜகப்போக்கைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்வதாக கேயார் கூறியுள்ளார்.

உண்ணாவிரதப் போராட்டத்தையடுத்து அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil