ஆர்ஆர்ஆர்.,ஐ ஓரம்கட்டிய கேஜிஎஃப் 2....வெறித்தனமான வசூல் வேட்டையால இருக்கு

சென்னை : யாஷின் கேஜிஎஃப் 2 படம், ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளி, அதிகம் வசூல் செய்த இந்திய படங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

கன்னட இயக்குனரான டைரக்டர் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் 2 படம் பான் இந்தியா படமாக ஏப்ரல் 14 ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. 2018 ம் ஆண்டு வெளிவந்து 200 கோடிக்கும் மேல் வசூல் செய்த கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் வெளியிடப்பட்டது.

தினம் ஒரு சாதனை

தினம் ஒரு சாதனை

கன்னட ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்த கேஜிஎஃப் 2 படம் ரிலீசானதில் இருந்து தினமும் ஒரு சாதனையை முறியடித்து வருகிறது. தற்போது ஆர்ஆர்ஆர் படத்தை விட பாக்ஸ் ஆபீசில் அதிக வசூலை பெற்று, அதிகம் வசூல் செய்த இந்திய படங்களின் பட்டியலில் கேஜிஎஃப் 2 இரண்டாம் இடம் பிடித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்திய அளவில் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் பாகுபலி 2 படத்திற்கு பிறகு கேஜிஎஃப் 2 உள்ளது.

கேஜிஎஃப் 2 வசூல் எவ்வளவு

கேஜிஎஃப் 2 வசூல் எவ்வளவு

உலக அளவில் கேஜிஎஃப் 2 படம் 1100 கோடி என்ற வசூல் இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது. ரிலீசான 20 நாட்களில் உலக அளவில் 1065.52 கோடிகளை கேஜிஎஃப் 2 படம் பெற்றுள்ளது. அதே சமயம் இந்தியில் அதிக தொகையை வசூலித்த படங்களின் பட்டியலில் கேஜிஎஃப் 2 முதலிடத்தில் உள்ளது. இதுவரை இந்தியில் அதிக வசூல் பெற்ற படங்களின் பட்டியலில் அமீர்கானின் டங்கள் படம் தான் முதலிடத்தில் இருந்து வந்தது. தற்போது இந்த சாதனையை கேஜிஎஃப் 2 முறியடித்துள்ளது.

டங்கள் படத்தையும் முந்திடுச்சா

டங்கள் படத்தையும் முந்திடுச்சா

டங்கள் படம் 390 கோடிகளை மட்டுமே வசூல் செய்திருந்தது. ஆனால் கேஜிஎஃப் 2 படம் 21 நாட்களில் 391 கோடிகளை வசூல் செய்துள்ளது. விரைவில் இந்தியில் 400 கோடி வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அளவில் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் தற்போது பாகுபலி 2 முதலிடத்திலும், கேஜிஎஃப் 2 இரண்டாவது இடத்திலும், ஆர்ஆர்ஆர் மூன்றாவது இடத்திலும், டங்கள் நான்காவது இடத்திலும், பாகுபலி 5 வது இடத்திலும் உள்ளன.

இந்தியாவில் 1000 கோடி வசூலா

இந்தியாவில் 1000 கோடி வசூலா

இந்தியாவில் கேஜிஎஃப் 2 படம் இதுவரை 900 கோடிகளை வசூல் செய்துள்ளது. விரைவில் 1000 கோடி வசூலை எட்டி மற்றொரு புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அளவில் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் இதுவரை 892 கோடிகளுடன் ஆர்ஆர்ஆர் இருந்து வந்தது. கேஜிஎஃப் 2 படத்திற்கு மக்களிடம் அதிகம் வரவேற்பு இருப்பதால் இந்த படம் அதிக வசூலை தொடர்ந்து பெற்று வருகிறது.

தமிழகத்தில் கேஜிஎஃப் 2 வசூல் எவ்வளவு

தமிழகத்தில் கேஜிஎஃப் 2 வசூல் எவ்வளவு

தமிழகத்தில் கேஜிஎஃப் 2 படம் 97.50 கோடிகளை பெற்றுள்ளது. விரைவில் 100 கோடி வசூல் என்ற மற்றொரு சாதனையையும் படைக்க உள்ளது. வட இந்தியாவில் 438 கோடிகளை கடந்துள்ளதால் விரைவில் 500 கோடி வசூல் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது. இந்திய அளவில் வசூலில் முதலிடத்தில் இருக்கும் பாகுபலி 2 படத்தின் வசூலையும் கேஜிஎஃப் 2 தொட்டு விட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X