twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கெத்துகாட்டிய கே.ஜி.எஃப் 2… தமிழகத்தில் திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிப்பு?

    |

    சென்னை : யாஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கே.ஜி.எஃப் 2 திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்துள்ளதால், தமிழகத்தில் அதிகமான தியேட்டர்கள் கிடைத்துள்ளன.

    Recommended Video

    KGF 2 Audience Review | Yash | KGF 2 Public Review | Filmibeat tamil

    கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது.

    உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் இப்படத்தை வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் பார்த்த ரசிகர்கள் படத்தை வெகுவாக புகழ்ந்து 'சலாம் ராக்கி பாய்' என கொண்டாடி வருகின்றனர்.

    பாகுபலியை முந்திய கேஜிஎப்… இந்தி படங்களை ஓரங்கட்டிய Yashபாகுபலியை முந்திய கேஜிஎப்… இந்தி படங்களை ஓரங்கட்டிய Yash

    கே.ஜி.எஃப் சாப்டர் 2

    கே.ஜி.எஃப் சாப்டர் 2

    நடிகர் யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2019-ல் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் முதல்பாகம் இந்திய அளவில் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இதன் அடுத்த பாகம், கடந்த 2020ல் வெளியாக வேண்டியிருந்த நிலையில் கொரோனா காரணமாக வெளியீடு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

    அனல் தெறிக்கும் கதை

    அனல் தெறிக்கும் கதை

    கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் தங்க சுரங்கத்தை தன் வசம் வைத்திருந்த கருடனை கொலை செய்து கே.ஜி.எஃப்பை யாஷ் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் தொடர்கிறது. கே.ஜி.எஃப் பில் வாழ்ந்து வரும் மக்களுக்கு நல்லது செய்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து வருகிறார் யாஷ். கே.ஜி.எஃப் பை பிடிக்க யாஷ்க்கு முன்னால் ஆசைப்பட்டு வந்தவர்கள், யாஷை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். இறுதியில் கே.ஜி.எஃப்பை யார் கைப்பற்றுகிறார்கள் என்பது தான் கதை.

    சலாம் ராக்கி பாய்

    சலாம் ராக்கி பாய்

    கன்னட சினிமாவின் பிராண்ட அம்பாஸிடராக உருவெடுத்திருக்கிறார் யஷ். 'சலாம் ராக்கி பாய்' என மற்ற மொழி ரசிகர்களும் அவரை உச்சி முகர்ந்து கொண்டாடி வருகிறார்கள். அவர் வரும் ஒவ்வொரு காட்சியில் திரையில் ஒரு பிரளயத்தை ஏற்படுத்தி மிரட்டுகிறது. நீளமான தாடியும், வாட்டசாட்டமான தேகம் என இளம் ரசிகைகளின் மாஸ் ஹீரோவாக மனதில் பதிந்துள்ளார்.

    அதிகமான திரையரங்குகளில்

    அதிகமான திரையரங்குகளில்

    தமிழகத்தில் நேற்று பீஸ்ட் திரைப்படம் கிட்டத்தட்ட 800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானதால், கே ஜி எப் 2 படத்திற்கு திரையரங்கு கிடைப்பதில் பிரச்சனை இருந்தது. இதனால் தமிழகத்தில் 200 திரையரங்குகளில் மட்டுமே கேஜிஎப் 2 திரைப்படம் வெளியானது. ஆனால், பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததாலும், கேஜிஎப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருவதாலும், தமிழகத்தில் 350க்கும் மேற்பட்ட அதிகமான திரையரங்குகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    English summary
    KGF 2 is being screened in most theatres in Tamilnadu
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X