என்ன சொல்றீங்க...ராக்கி பாய் வீட்டிற்கே வர போகிறாரா...எப்போ?
சென்னை : கன்னட டைரக்டர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 2018 ம் ஆண்டு உருவான படம் கேஜிஎஃப். நடிகர் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை ஹம்பாலா ஃபிலிம்ஸ் தயாரித்திருந்தது. 80 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் கிட்டதட்ட 300 கோடி வரை வசுல் செய்தது.
தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பிரசாந்த் நீல் இயக்கினார். ஏப்ரல் 14 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்ட கேஜிஎஃப் 2, 2022 ம் ஆண்டின் மிகப் பெரிய வசுல் சாதனை படைத்த படமாக மாறியது.
கேஜிஎப் படத்தில் தனது தாயின் ஆசையை நிறைவேற்ற, நிறைய பணம் சம்பாதிக்க முடிவு செய்யும் சிறுவன், மிகப் பெரிய டானாக உருவெடுக்கிறான். ராக்கி பாய் எப்படி கேஜிஎஃப் ஐ ஆட்சி செய்யும் கருடனை கொலை செய்து, கேஜிஎஃப் ஐ கைப்பற்றுகிறான் என்பது தான் முதல் பாகத்தின் கதை. இரண்டாம் பாகத்தில் கேஜிஎஃப் ஐ மிகப் பெரிய சாம்ராஜ்யமாக்கி, மக்கள் ஆதரவுடன் எப்படி இந்தியாவிற்கே டானாக வளர்க்கிறான் என காட்டி உள்ளனர்.

கேஜிஎஃப் 2 வசூல் இத்தனை கோடியா
கேஜிஎஃப் 2 படம் இதுவரை உலகம் முழுவதும் 1198 கோடிகளை வசுல் செய்துள்ளது. இந்த படம் ஓடிடி.,யிலும் வெளியிடப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றது. அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட படமாக இந்த படம் மாறி உள்ளது. பல வசுல் சாதனைகளை முறியடித்து, அனைவரையும் கேஜிஎஃப் பற்றி பேச வைத்து விட்டது.

கேஜிஎஃப் 3 க்கு காத்திருக்கும் ரசிகர்கள்
இந்நிலையில் விரைவில் கேஜிஎஃப் 3 படத்தை இயக்க உள்ளதாக டைரக்டர் பிரசாந்த் நீல் அறிவித்துள்ளார். அதற்கு முன் மற்றொரு படத்தை இயக்கி விட்டு, கேஜிஎஃப் 3 வேலைகளை துவக்க உள்ளதாகவும் அதற்கு அதிக அவகாசம் தேவைப்படுவதாக பிரசாந்த் நீல் தெரிவித்தார். கேஜிஎஃப் 2 படத்தின் க்ளைமாக்சில் கடலில் முழ்கும் ராக்கி பாய்க்கு என்ன ஆகும், அவர் எப்படி சர்வதேச மான்ஸ்டராக உருவெடுக்கிறார் என்பது தான் கேஜிஎஃப் 3 படத்தின் கதை என சொல்லப்படுகிறது.

ராக்கி பாய் வர போகிறாரா
கேஜிஎஃப் 3 எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், கேஜிஎஃப் 2 படம் விரைவில் டிவி.,யில் திரையிடப்பட உள்ளது. 2022 ம் ஆண்டின் மிகப் பெரிய பிளாக் பஸ்டர் படமான கேஜிஎஃப் 2, ஜீ தமிழ் சேனலில் விரைவில் ஒளிபரப்பப்பட உள்ளதாக ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் எந்த தேதியில் இந்த படம் ஒளிபரப்பப்பட உள்ளது என அறிவிக்கப்படவில்லை.
Recommended Video

எப்போ கேஜிஎஃப் 2 வர போகுது
ஏதாவது பண்டிகை நாளில் சிறப்பு திரைப்படமாக தான் பெரிய படங்கள் ஒளிபரப்பப்படும் என்பதால், ஆகஸ்ட் 15 ம் தேதி கேஜிஎஃப் 2 படம் ஒளிபரப்பு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











