Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 20 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது...
- News
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் சேர்ப்பு: வரும் 31ம் தேதிக்குள் இணைத்திடுங்கள்.. அமைச்சர் செந்தில் பாலாஜி
- Sports
தேவையில்லாமல் போசாதே.. உன் வேலையை மட்டும் பார்.. சர்பிராஸ் கானுக்கு தேர்வுக்குழுவினர் எச்சரிக்கை
- Finance
ஹெச்யுஎல் நிறுவனத்தின் நிகரலாபம் 12% அதிகரிப்பு.. ஆனா பங்கு விலை மட்டும் சரிவு..!
- Automobiles
இதுல ஒன்னு கைகளுக்கு வந்தாலும் வேற லெவல்ல சீன் போடலாம்.. 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த டாப் எஸ்யூவி கார்!
- Technology
ரூ.10,000 பாஸ்.. தள்ளுபடியில் தத்தளிக்கும் MacBook, ஏர்பாட்ஸ் ப்ரோ! கெத்து காட்ட நேரம் வந்துருச்சு!
- Travel
பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துக் கொள்ள இப்போதே டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
- Education
Micro Job Fair in Namakkal 2023: நாமக்கலில் நாளை வேலைவாய்ப்பு முகாம்...!
அந்த ஒரு நொடி மரண பீதியாகிடுச்சு.. கேஜிஎஃப் நடிகர் கார் மீது மோதிய டிரக்.. என்ன ஆச்சு தெரியுமா?
பெங்களூரு: கேஜிஎஃப் படத்தில் அவரை ஆரம்பத்தில் பார்க்கும் போதே பயங்கரமாக இருக்கும், அப்படியொரு கேங்ஸ்டர் ரோலில் நடித்தவர் நடிகர் பி.எஸ். அவினாஷ்.
புதன்கிழமை காலையில், ஜிம்முக்கு செல்லும் போது எதிர்பாராத விதமாக அவரது கார் மீது சிக்னலை அத்துமீறி டிரக் ஒன்று மோத மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது.
கன்னட திரையுலகையே இந்த விபத்து சம்பவம் கலங்கடித்த நிலையில், விபத்தில் உயிர் பிழைத்த பி.எஸ். அவினாஷ் அது குறித்து பேசியிருப்பது டிரெண்டாகி வருகிறது.
சமந்தாவை தொடர்ந்து கேஜிஎஃப் ஹீரோயின் உடன் ஜக்கி வாசுதேவ்.. டிரெண்டாகும் Save Soil புகைப்படங்கள்!

கேஜிஎஃப் கேங்ஸ்டர்
கேஜிஎஃப் படத்தின் முதல் பாகத்தில் மும்பையில் இருந்து ராக்கி பாயை கர்நாடகாவிற்கு கொண்டு வரும் பொறுப்பே இவரிடம் தான் கொடுக்கப்பட்டு இருக்கும். கன்னட நடிகரான பி.எஸ். அவினாஷ் பல கன்னட படங்களில் நடித்திருந்தாலும், கேஜிஎஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகம் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை அளித்துள்ளது. இது போன்ற மிரட்டலான பார்க்கவே பயங்கரமாக இருக்கும் கேங்ஸ்டர்கள் நடுவே தான் ராக்கி பாய் மான்ஸ்டராக ராஜாங்கம் நடத்தும் போது, அந்த கதாபாத்திரத்திற்கு வலிமை கூடுகிறது.

கார் விபத்து
புதன்கிழமை காலை வழக்கம் போல ஜிம்முக்கு தனது மெர்சிடஸ் பென்ஸ் காரில் சென்றிருந்த போது, எதிர்பாராத விதமாக டிரக் ஒன்று இவரது கார் மீது மோத பெரும் விபத்து ஏற்பட்டது. கேஜிஎஃப் நடிகர் கார் விபத்துக்குள் சிக்கியது கன்னட ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்தது ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது.

என்ன நடந்தது
காலை 6 மணிக்கு வழக்கம் போல ஜிம்முக்கு எனது காரில் சென்று கொண்டிருந்தேன். க்ரீன் சிக்னல் போட்ட நிலையில், சிக்னலை கிராஸ் செய்ய முயற்சித்தேன். அப்போது, ரெட் சிக்னல் போட்டதையும் மதிக்காமல் அத்துமீறி நுழைந்த டிரக் என் காரை வேகமாக இடித்துத் தள்ளியது. கடவுள் புண்ணியத்தால் பெரிய காயங்கள் ஏதுமின்றி உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் எனக் கூறியுள்ளார்.

மரண பீதி
என் வாழ்வில் படங்களில் எத்தனையோ ஸ்டன்ட் காட்சிகளில் நடித்திருக்கிறேன், பார்த்திருக்கிறேன். ஆனால், நேரடியாக நடக்கும் போது அந்த ஒரு செகண்ட் மரண பீதியில் உறைந்தே போய்விட்டேன் என்றார். கேஜிஎஃப் இரண்டாம் பாதியில் இவரது கதாபாத்திரம் கொல்லப்பட்டு விடும். ராக்கி பாயும் இறப்பது போல் தான் காட்சி அமைந்திருக்கும். கேஜிஎஃப் 3ம் பாகத்திலும் பி.எஸ். அவினாஷ் வருவாரா? சலார் படத்தில் இடம்பெற்றுள்ளாரா என ஏகப்பட்ட கேள்விகளை ரசிகர்கள் கேட்க, சைலன்ஸை மெயின்டெயின் செய்து வருகிறார்.