Don't Miss!
- News
உயரப் போகுது விலை! தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் இறக்குமதிக்கு வரி அதிகரிப்பு
- Finance
7 லட்சம் வரையில் ஜீரோ வருமான வரி.. முழு விபரம்..! யாருக்கெல்லாம் நன்மை..!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கேஜிஎஃப் நடிகர் மோகன் ஜுனேஜா காலமானார்... சோகத்தில் திரையுலகினர்
பெங்களூரு : கன்னட நடிகர் மோகன் ஜுனேஜா இன்று காலை காலமானார். 54 வயதாகும் மோகன் ஜுனேஜா சமீபத்தில் வெளியாகி உலக அளவில் வசூல் சாதனை படைத்து வரும் கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.
கர்நாடக மாநிலம் தும்குரை சேர்ந்த மோகன், 2008 ம் ஆண்டு சங்கமா என்ற கன்னட படத்தின் மூலம் நடிகராக சினிமாவில் அறிமுகமானார். 54 வயதாகும் மோகன் இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 100 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் வில்லன் மற்றும் காமெடி ரோல்களிலேயே நடித்துள்ளார்.
பயில்வான் ரங்கநாதனை அப்படி திட்டிய தயாரிப்பாளர் ராஜன்.. கமிஷனர் அலுவலகத்தில் திடீர் புகார்!

கேஜிஎஃப் நடிகர்
கன்னடத்தில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த மோகன், கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்திருந்தார். ராக்கி பாய் பற்றியும், கேஜிஎஃப் பற்றியும் பத்திரிக்கையாளரிடம் விளக்கமாக கூறும் ஏரியாவாசியாக நடித்திருந்தார். இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. படங்கள் மட்டுமின்றி பல டிவி சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.

மோகன் ஜுனேஜா காலமானார்
நீண்ட காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த மோகன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சைக்கு அவரது உடல்நிலை ஒத்துழைக்காததால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால் கடந்த சில நாட்களாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மோகன், இன்று காலை உயிரிழந்தார். மோகன் ஜுனேஜா கல்லீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்காக பல காலமாக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

100 படங்களில் நடித்த மோகன் ஜுனேஜா
கன்னடம் மற்றும் தமிழில் தயாரிக்கப்பட்ட டாக்சி டிரைவர் நம்பர் 1 என்ற படத்தில் மோகன் ஜுனேஜா நடித்திருந்தார். படங்களில் நடித்ததுடன் சீரியல்கள் மற்றும் படங்களுக்கு வசனமும் எழுதி உள்ளார் மோகன் ஜுனேஜா. கேஜிஎஃப் 1 படத்தில் இவர் பேசிய வசனங்கள் அனைத்தும் இவரே எழுதியதாகும். ராக்கி பாய் பற்றி மாஸாக சொல்லும் இவரின் வசனங்கள் படத்தில் மிக பிரபலமானது.

பிரபலங்கள், ரசிகர்கள் வேதனை
மோகன் ஜுனேஜாவின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரின் மறைவிற்கு கன்னட திரையலகை சேர்ந்த பலரும் சோஷியல் மீடியாக்களில் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.ரசிகர்கள் பலரும் தங்களின் வேதனையை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர்.