ஆன்லைன் புக்கிங்கிலேயே இப்படி ஒரு மிரட்டலா... கேஜிஎஃப் 2 தான் இந்தியாவிலேயே நம்பர் ஒன்

சென்னை : கேஜிஎஃப் 2 படம் நாளை ரிலீசாக உள்ள நிலையில் படத்தில் அட்வான்ஸ் புக்கிங் பற்றியும், அதில் படைத்த சாதனை பற்றியும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அட்வான்ஸ் புக்கிங்கே இப்படி இருந்தால், படத்தின் வசூல் எப்படி இருக்கும் என அனைவரும் ஆச்சரியமாக கேட்டு வருகிறார்கள்.

2018 ம் ஆண்டு டைரக்டர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கன்னட ராக் ஸ்டார் கேஜிஎஃப் சாப்டர் 1 படம் பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. அனைத்து மொழிகளிலும் இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தை கேஜிஎஃப் சாப்டர் 2 என்ற பெயரில் உருவாக்கி உள்ளனர்.

10,000 தியேட்டர்களில் ரிலீஸ்

10,000 தியேட்டர்களில் ரிலீஸ்

சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் நாளை ரிலீஸ் செய்யப்பட உள்ளது. யாஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீணா டண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் இந்திய அளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது. உலகம் முழுவதும் கிட்டதட்ட 10,000 தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

முதல் நாள் வசூல் எப்படி இருக்கும்

முதல் நாள் வசூல் எப்படி இருக்கும்

தமிழகத்தில் மட்டும் 250 தியேட்டர்களில் கேஜிஎஃப் 2 படம் ரிலீசாக உள்ளது. கிரீஸ் நாட்டில் ரிலீஸ் செய்யப்பட உள்ள முதல் கன்னட படம் இது தான். இந்த படம் பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் படங்களின் சாதனையை முறியடிக்குமா என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கேஜிஎஃப் சாப்டர் 1 படம் முதல் நாளில் 40 கோடியை வசூல் செய்தது. அதனால் கேஜிஎஃப் சாப்டர் 2 படம் நிச்சயம் முதல் நாள் வசூல் 43 முதல் 45 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிலேயே நம்பர் ஒன்

இந்தியாவிலேயே நம்பர் ஒன்

அதே சமயம் 30 கோடிக்கும் குறையாமல் முதல் நாள் வசூல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல் நாள் வசூல் இருக்கட்டும், அதற்கு முன் ஆன்லைன் புக்கிங்கிலேயே ஆர்ஆர்ஆர் படத்தின் வசூலை மிஞ்சி உள்ளது கேஜிஎஃப் 2. 2022 ம் ஆண்டில் இந்தியாவிலேயே முதல் நாள் ஷோவிற்கு அட்வான்ஸ் புக்கிங்கில் அதிக தொகையை வசூல் செய்த படம் இது தானாம்.

அட்வான்ஸ் புக்கிங்கிலேயே சாதனை

அட்வான்ஸ் புக்கிங்கிலேயே சாதனை

கேஜிஎஃப் 2 படம் முதல் நாள் ஷோவிற்கான அட்வான்ஸ் புக்கிங்கில் 65.10 கோடியை வசூல் செய்துள்ளது. ஆர்ஆர்ஆர் படம் 58.73 கோடியை வசூல் செய்திருந்தது. அதே சமயம் ஆர்ஆர்ஆர் படம் ஆந்திராவில் ஆஃப்லைன் டிக்கெட் விற்பனையில் 156 கோடியை இந்தியாவில் வசூல் செய்தது. ஆர்ஆர்ஆர் படம் ரிலீசான முதல் 15 நாட்களில் உலகம் முழுவதும் 1000 கோடிகளை வசூல் செய்துள்ளது. உலக அளவில் 1000 கோடி வசூலை கடந்த இரண்டாவது இந்திய படம் இது தான். இதற்கு முன் ராஜமெளலி இயக்கிய பாகுபலி 2 படம் 1800 கோடிகளை வசூல் செய்தது.

 ஆர்ஆர்ஆர் சாதனையை முறியடிக்குமா

ஆர்ஆர்ஆர் சாதனையை முறியடிக்குமா

அட்வான்ஸ் புக்கிங்கில் ஆர்ஆர்ஆர் சாதனையை முறியடித்ததை போல் வசூலிலும் ஆர்ஆர்ஆர் மற்றும் பாகுபலி படங்களின் சாதனைகளை கேஜிஎஃப் சாப்டர் 2 முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X