கேஜிஎஃப் 2 முதல் நாளிலேயே 100 கோடி கிளப்பில் இணைந்து சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
சென்னை: வெறும் 100 கோடி பட்ஜெட்டில் பட்ஜெட் முழுவதுமே படத்தின் மேக்கிங்கிற்காக மட்டுமே செலவு செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட நிலையில், கேஜிஎஃப் சாப்டர் 2 முதல் நாளிலேயே 100 கோடி கிளப்பில் இணைந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.
தென்னிந்திய திரையுலகிலெயே கடைசி இடத்தில் கன்னட திரையுலகை கேஜிஎஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகம் படங்கள் மூலமாக டோலிவுட் சினிமாவுக்கு சவால் விடும் அளவுக்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் நீல்.
பீஸ்ட் படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், கேஜிஎஃப் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான Hombale Films தற்போது அதிகாரப்பூர்வ பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது.

மேக்கிங் முக்கியம்
நடிகர்கள் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதை விட அவர்கள் நடிக்கும் படத்தின் மேக்கிங்கிற்கு எத்தனை கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது என்பது தான் ரொம்பவே முக்கியம். இயக்குநர் பிரசாந்த் நீல் மற்றும் நடிகர் யஷ் இருவரும் இணைந்து பல இரவுகள் தூங்காமல் கடும் உழைப்பை போட்டு இந்த படத்தை உருவாக்கி உள்ளனர்.

100 கோடி தான் பட்ஜெட்
400 கோடி பட்ஜெட்டில் இயக்குநர் ராஜமெளலி பிரம்மாண்டமாக ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி உள்ளார். பீஸ்ட் படத்தின் பட்ஜெட் 190 கோடி என சொல்லப்படுகிறது. இந்நிலையில், வெறும் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள கேஜிஎஃப் 2 திரைப்படம் ராஜமெளலியின் RRR படத்துடன் போட்டிப் போட்டு முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் இந்தியளவில் மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறது.

134.5 கோடி
இந்தியளவில் நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி உள்ள கேஜிஎஃப் இரண்டாம் பாகம் திரைப்படம் முதல் நாளில் 134.5 கோடி ரூபாய் வசூலை வாரி குவித்து இமாலய சாதனையை படைத்திருக்கிறது. உலகளவில் 150 கோடிக்கும் அதிகமான வசூல் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படியொரு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் Hombale Films இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
Recommended Video

அதிகரிக்கும் தியேட்டர்கள்
பெரிய பாலிவுட் படங்கள் ஏதும் வெளியாகாத நிலை மற்றும் விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு கிடைத்திருக்கும் நெகட்டிவ் ரிப்போர்ட் உள்ளிட்டவை காரணமாக இரண்டாம் நாளான இன்று முதல் மேலும், கேஜிஎஃப் 2 படத்திற்கான தியேட்டர்களும் காட்சிகளும் உலகம் முழுவதும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக முதல் வார முடிவில் 300 முதல் 400 கோடி ரூபாய் வசூலை இந்தியளவில் கேஜிஎஃப் 2 எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











