மும்பை மக்களை வியக்க வைத்த ராக்கிங் ஸ்டார் யஷ்...படக்குழு என்ன பண்ணிருக்காங்க பாருங்க

மும்பை : ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்த கேஜிஎஃப் 2 படம் நாளை ரிலீசாக உள்ளதை கொண்டாடுவதற்காகவும், மக்களை கவர்வதற்காக படக்குழுவினர் செய்துள்ள காரியம் மும்பை மக்கள் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

2018 ம் ஆண்டு டைரக்டர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கன்னட ராக் ஸ்டார் கேஜிஎஃப் சாப்டர் 1 படம் பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. அனைத்து மொழிகளிலும் இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தை கேஜிஎஃப் சாப்டர் 2 என்ற பெயரில் உருவாக்கி உள்ளனர்.

10,000 தியேட்டர்களில் ரிலீஸ்

10,000 தியேட்டர்களில் ரிலீஸ்

சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் நாளை ரிலீஸ் செய்யப்பட உள்ளது. யாஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீணா டண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் இந்திய அளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது. உலகம் முழுவதும் கிட்டதட்ட 10,000 தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

100 அடி கட்அவுட்

100 அடி கட்அவுட்

கர்நாடகாவில் மட்டுமின்றி மகாராஷ்டிராவிலும் இந்த படத்தை திருவிழாவாக கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ராக்கிங் ஸ்டார் யஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'கே ஜி எஃப் 2' படத்தை காண்பதற்காக ரசிகர்களை திரையரங்குக்கு கவர்ந்திழுக்கும் வகையில் இப்பட நாயகனுக்கு 100 அடி உயரத்திற்கு கட் அவுட் வைத்திருக்கிறார்கள்.

5 மொழிகளில் ரிலீஸ்

5 மொழிகளில் ரிலீஸ்

ஹோம்பாலே பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் 100 கோடி செலவில் தயாரித்திருக்கும் 'கேஜிஎஃப் சாப்டர் 2' படத்தை இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியிருக்கிறார். இந்த படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் ஏப்ரல் 14ஆம் தேதியன்று வெளியாகிறது.

வியந்து போன மும்பை மக்கள்

வியந்து போன மும்பை மக்கள்

இந்த படத்தை தமிழகம் முழுவதும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு வெளியிடுகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதால் இந்தி திரை உலக ரசிகர்களை கவர்வதற்காக குறிப்பாக மும்பை மக்களை கவர்வதற்காக பட குழுவினர் அந்த மாநகரத்தில் அமைந்திருக்கும் கார்னிவல் சினிமாஸ் என்ற திரைப்பட வளாகத்தில்100 அடி உயரத்தில் படத்தின் நாயகனான ராக்கிங் ஸ்டார் யஷ்க்கு பிரமாண்டமான கட் அவுட்டை வைத்திருக்கிறார்கள்.

வசூல் சாதனை படைக்குமா

வசூல் சாதனை படைக்குமா

ராக்கிங் ஸ்டார் யஷ்ஷின் பிரம்மாண்டமான கட் அவுட்டை மும்பைவாசிகள் அண்ணாந்து பார்த்து வியக்கிறார்கள். அதனை வீடியோவாகவும், செல்ஃபியாகவும் எடுத்து தங்களது இணையப் பக்கத்திலும், சமூக வலைதளப் பக்கத்திலும் பகிர்ந்து வருகிறார்கள். இதன் காரணமாக 'ராக்கிங் ஸ்டார்' நடிப்பில் வெளியாகும் 'கே ஜி எஃப் சாப்டர் 2' முதல் நாளன்று வசூல் சாதனை படைக்கும் என திரையுலக வணிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.

இது தான் முதல் முறை

இது தான் முதல் முறை

இதனிடையே இந்தி திரை உலகில் முதன் முதலாக நடிகர் ஒருவருக்கு 100 அடி உயரத்தில் கட் அவுட் வைக்கப்பட்டிருப்பது சாதனையாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்தி நடிகர்களுக்கு கூட இவ்வளவு உயர கட்அவுட் வைத்தது கிடையாதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X