Just In
- 19 min ago
என் பரம்பரையிலேயே முதல் கார்.. எங்க அம்மா அழுதுட்டாங்க.. குக் வித் கோமாளி 2 புகழ் உருக்கம்!
- 30 min ago
பாலிவுட் மெகா ஸ்டார்களுடன் கைகோர்க்கும் பிரபாஸ்...பிரம்மாண்டமாக தயாராகும் அதிரடி
- 1 hr ago
100 மில்லியன் வியூஸ்களை கடந்த செல்லம்மா பாடல்.. ஜாலி மோடில் சிவகார்த்திகேயன் ஷேர் செய்த வீடியோ!
- 2 hrs ago
கர்ணன் படத்தின் அடுத்த அப்டேட்.. அசத்தலாய் அறிவித்த தனுஷ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
Don't Miss!
- News
ஒருத்தரை நம்பி திட்டம் போட்டேன்.. வீணாப் போச்சு.. விரைவில் அறிவிப்பேன்.. கஸ்தூரி அதிரடி தகவல்!
- Automobiles
வெறும் ரூ.50,000 மட்டுமே... ஹைதராபாத்தில் டெலிவிரி துவங்கியது ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்!!
- Sports
புலம்பறதையும் புகார் சொல்றதையும் விடுங்க... என்ன செய்யறதுன்னு யோசிங்க... ரிச்சர்ட்ஸ் அறிவுரை!
- Education
ரூ.84 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் IIFCL நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
9 மாத சரிவில் சீன உற்பத்தி துறை.. கடும் பாதிப்பில் வேலைவாய்ப்பு சந்தை..!
- Lifestyle
2020 ஆம் ஆண்டில் சாதித்த மிகவும் சக்தி வாய்ந்த இந்திய பெண்கள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'கேஜிஎப் சாப்டர் 2' கிளைமாக்ஸ்... பிரமாண்ட செட்டில் சிக்ஸ்பேக்குடன் மோதும் ஆதிராவும் ராக்கி பாயும்!
சென்னை: 'கேஜிஎப் 2' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ஏராளமான பொருட் செலவில், பிரமாண்டமாக எடுக்க உள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கன்னட ஹீரோ யஷ் நடித்த 'கே.ஜி.எப்' படம் கன்னடம் தவிர தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.
பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம், சூப்பர் ஹிட்டானது. படம் மொத்தம் ரூ.250 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. இத்தனைக் கோடியை சம்பாதித்த முதல் கன்னடப் படம் இதுதான்.

அதிக பட்ஜெட்
இந்தப் படத்தை நடிகர் விஷால், தமிழில் வெளியிட்டார். இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் இன்னும் அதிக பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல், இதையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

ஆக்ரோஷ வில்லன்
இதில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத், ஆக்ரோஷ வில்லனாக அதீரா என்ற கேரக்டரில் நடிக்கிறார். முதல் பாகத்தை தமிழில் வெளியிட்ட விஷால், இரண்டாம் பாகத்தையும் வெளியிடுகிறார். முதல் பாகம் ஹிட்டானதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதை அதிகரிக்கும் வகையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இரண்டாம் லுக் போஸ்டரும் அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ரவீணா டாண்டன்
இந்நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை ரவீணா டாண்டன் இணைந்தார். அவர், பிரதமராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. அவர் நடிக்கும் காட்சிகள் மைசூரில் படமாக்கப்பட்டன. இந்தக் கேரக்டரில் நடிக்க முதலில், ரம்யா கிருஷ்ணனிடம்தான் கேட்டதாகவும் அவர் அதிக சம்பளம் கேட்டதால் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து மைசூரில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

கிளைமாக்ஸ்
கடைசிக்கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்க இருக்கிறது. அங்கு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஆக்ஷன் காட்சிகள் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட இருக்கின்றன. அதில் ஆக்ரோஷ வில்லன் சஞ்சய் தத், ஹீரோவுடன் மோதும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இருவரும் சிக்ஸ்பேக் வைத்துள்ளதால், சட்டை அணியாமல் மோத உள்ளனர். இந்தக் காட்சிக்காக சிறப்பு செட் உருவாக்கப்பட்டுள்ளது. படம் ஜூலை மாதம், இந்தி, தமிழ், கன்னடம் உட்பட 5 மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.