Don't Miss!
- Finance
சுத்தி சுத்தி அடிவாங்கும் அதானி.. சிட்டி குரூப் வைத்த செக்..!
- Technology
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- Automobiles
அம்பானியாவே இருந்தாலும் யோசிச்சுதான் இனி சொகுசு காரை வாங்கணும்! அந்தமாதிரி செக் நிர்மலா சீதாராமன் வச்சிட்டாங்க
- News
இரட்டை இலை சின்னம் கேட்டால் கையெழுத்து போடுவேன்..சசிகலாவை சந்திப்பேன்..ஓ.பன்னீர் செல்வம் உறுதி
- Lifestyle
விபரீத ராஜயோகத்தால் பிப்ரவரியில் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Sports
பாகிஸ்தானுக்காக நான் எவ்வளவு செய்தேன்.. என்னை இப்படியா நடத்துவீங்க. இந்தியாவை பாருங்க -உமர் அக்மல்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரசிகர்கள் கொண்டாட்டத்தில் 100 நாட்களை கடந்த கேஜிஎப்2 படம்.. கொண்டாட்டத்தில் படக்குழு!
சென்னை : கேஜிஎப் 2 படம் பான் இந்தியா படமாக கடந்த ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது.
தற்போது ஓடிடியில் இந்தப் படம் வெளியான நிலையிலும் திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
சர்வதேச அளவில் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் இந்தப் படம் குவித்துள்ளது.
சிம்புவுக்கு இப்போ அது நடந்தே ஆகணுமாம்!: ரசிகர்களோட எதிர்பார்ப்பு என்ன ஆகப் போகுதோ?

கேஜிஎப் 2 படம்
நடிகர் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது கேஜிஎப் சாப்டர் 2 படம். இந்தப் படத்தின் மிரட்டலான முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்தப் படம் வெளியானது. பிரஷாந்த் நீல் இயக்கத்தில் இந்தப் படம் வெளியானது.

மிரட்டலான 2வது பாகம்
முதல் பாகத்தை தூக்கி சாப்பிடும் வகையில் இதன் வரவேற்பு காணப்பட்டது. வசூலிலும் படம் மிரட்டியது. தொடர்ந்து சர்வதேச அளவில் ரசிகர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்த இந்தப் படம் 1400 கோடி ரூபாய் வசூலை தாண்டி தொடர் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. படம் வெளியான முதல் 4 நாட்களிலேயே சர்வதேச அளவில் 500 கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் எட்டியது.

100 நாட்களை கடந்து சாதனை
தற்போது இந்தப் படம் திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து ஓடி வருகிறது. முதல் ஒரு மாதத்தில் அரங்கு கொள்ளாத காட்சிகளாக வெற்றிகரமாக ஓடி விநியோகஸ்தர்களுக்கு சிறப்பா கைக்கொடுத்தது கேஜிஎப் 2. சென்டிமெண்ட், ஆக்ஷன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் நிறைவாக கொடுத்தது இந்தப் படம்.

பிசியான பிரஷாந்த் நீல்
இதையடுத்து தொடர்ந்து படத்தின் 3வது பாகமும் எடுக்கப்பட உள்ளதாக தயாரிப்புத்தரப்பு தெரிவித்தது. ஆனால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிரஷாந்த் நீல் பிசியானதை தொடர்ந்து இதன் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. தற்போது பிரபாசை சலார் படத்திற்காக இயக்கி வருகிறார் பிரஷாந்த் நீல்.

சிறப்பான நடிகர் யஷ்
அடுத்ததாக ஜூனியர் என்டிஆருடன் அவர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்த இந்தப் படங்கள் அவருக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் நடித்த நடிகர் யஷ்ஷுக்கும் இந்தப் படம் சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. அவரின் ஸ்டைல் படத்தில் மாஸ் காட்டியது.

அதிகரித்த ரசிகர்கள் வட்டம்
இந்தப் படங்களின்மூலம் அவரது ரசிகர்கள் வட்டம் அதிகரித்துள்ளது. முன்னதாக 20க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்திருந்தாலும் கேஜிஎப் படங்களே அவருக்கு சிறப்பாக அமைந்தது. கன்னட சினிமாவை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று முன்னதாக அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.

சர்வதேச கவனம்
அந்த வகையில், கேஜிஎப் படங்கள் சர்வதேச அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தப் படத்தின் காட்சி அமைப்புகள், திரைக்கதை உள்ளிட்டவை அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து இதுபோன்ற படங்கள் கன்னடத்தில் வெளியாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
Recommended Video

ரசிகர்கள் கொண்டாட்டம்
இதனிடையே, கேஜிஎப் சாப்டர் 2 படம் திரையரங்குகளில் 100 நாட்களை கடந்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படக்குழுவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. விரைவில் கேஜிஎப் சாப்டர் 3 படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், அதன் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.