‘கே ஜி எஃப் 2’ டிரைலர் நாளை ரிலீஸ்...சோஷியல் மீடியா அதிர போகுது

சென்னை : ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் முன்னணி நடிகர் யஷ் நடிப்பில் தயாராகியிருக்கும் 'கே ஜி எஃப் சாப்டர் 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது.

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2'. இப்படத்தின் முதல் பாகம் 2018 ம் ஆண்டு வெளியாகி, 250 கோடி ரூபாய் வசூலித்து இந்திய அளவில் சாதனை படைத்தது. இதனையடுத்து 'கே ஜி எஃப் 2' திரைப்படம், வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

வருது கேஜிஎஃப் 2

வருது கேஜிஎஃப் 2

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் 'கே ஜி எஃப் சாப்டர் 2' படத்தில் கதையின் நாயகனாக ராக் ஸ்டார் யஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார்.

சாதனை படைத்த கேஜிஎஃப் 2 டீசர்

சாதனை படைத்த கேஜிஎஃப் 2 டீசர்

இப்படத்தின் டீஸர் வெளியாகி 240 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. அண்மையில் வெளியான இப்படத்தின் பாடலும் மில்லியன் கணக்கிலான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் ஆக்ஷன் ரசிகர்களுக்கிடையே பேரார்வத்தை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டிரைலர் பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே நாளை வெளியாகிறது.

ஏப்ரல் 14 ரிலீஸ்

ஏப்ரல் 14 ரிலீஸ்

100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள கேஜிஎஃப் 2 படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ஏப்ரல் 14 ம் தேதி ரிலீசாக உள்ளது. கொரோனா, லாக்டவுன், கோர்ட் தடை என பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக இந்த படம் ரிலீசாக உள்ளதை ராசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இது தான் படத்தின் கதையா

இது தான் படத்தின் கதையா

கருடாவை கொன்ற பிறகு, மக்கள் மனதில் அழுத்தமான இடத்தை பிடிக்கும் ராக்கி, அதீரா என்ற தனது எதிரியால் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார். அவரின் கடந்த கால வாழ்க்கையை சொல்வது தான் கேஜிஎப் 2 படத்தின் கதையாம். 2020 ம் ஆண்டே ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட படத்தின் ஷுட்டிங் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் நிறைவடைந்தது.

எப்போ ஓடிடி ரிலீஸ்

எப்போ ஓடிடி ரிலீஸ்

கேஜிஎஃப் 2 படத்தின் தென்னிந்திய சேட்டிலைட் உரிமத்தை ஜீ நெட்வொர்க்கும். வட இந்திய சேட்டிலைட் உரிமத்தை சோனி நெட்வொர்க்கும் பெற்றுள்ளன. இந்த படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமத்தை அமேசான் பிரைம் வீடியோ பெற்றுள்ளது. தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட பிறகு ஓடிடி ரிலீஸ் தேதியை அமேசான் அறிவிக்க உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X