கேஜிஎஃப் 3 கதை லீக் ஆகிடுச்சு...அடுத்த 1000 கோடி வசூல் கன்ஃபார்ம்

சென்னை : கேஜிஎஃப், கேஜிஎஃப் சாப்டர் 2 படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து கேஜிஎஃப் சாப்டர் 3 எடுக்க போவதாக கேஜிஎஃப் 2 படத்தின் இறுதியிலேயே சொல்லி விட்டார்கள். தற்போது கேஜிஎஃப் 3 படத்தின் கதை என்ன என்பதும் வெளியாகி உள்ளது.

டைரக்டர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், ஹம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கன்னட ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்த கேஜிஎஃப் படம் 2018 ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கன்னட மொழியில் எடுக்கப்பட்ட இந்த படம் செம ஹிட் ஆனதால், பிறகு மற்ற மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட்டது.

யார் இந்த ராக்கி பாய்

யார் இந்த ராக்கி பாய்

ஒரு சிறுவன், தனது தாயின் கனவை நிறைவேற்றுவதற்காக எப்படி ராக்கி பாய் என்ற பெரிய டானாக, நிறைய பணம் சம்பாதிக்கிறான். அரசியல்வாதிகள், பெரிய கேங்ஸ்டர்களுக்கு உதவதற்காக சென்று கேஜிஎஃப்பில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்த கருடனை எவ்வாறு கொல்கிறான் என்பது தான் கேஜிஎஃப் முதல் பாகத்தின் கதை. இரண்டாவது பாகத்தில், தனது தாயின் ஆசைப்படி உலகில் உள்ள மொத்த தங்கத்தையும் தனக்கு சொந்தமாக்க, மக்களின் ஆதரவோடு கேஜிஎஃப்பை கைப்பற்றி, இந்திய அளவில் பெரிய மான்ஸ்டர் ஆகிறான் என்பது தான் கதை.

ராக்கி பாய் இறந்து விட்டாரா

ராக்கி பாய் இறந்து விட்டாரா

இரண்டாம் பாகத்தின் க்ளைமாக்சில், ராக்கி பாய் வந்த கப்பலை இந்திய கடற்படை தாக்கியதால் அவர் கடலில் மூழ்குவது போல் காட்டப்பட்டிருக்கும். இதனால் படம் பார்த்த ஒவ்வொருவரும் கேட்கும் கேள்வி, ராக்கி பாய் இறந்து விட்டாரா. அப்படியானால் கேஜிஎஃப் 3 யாரை மையமாக கொண்டது. என்ன கதை என்பது தான். இதற்கான பதில் தான் கேஜிஎஃப் 3 படத்தின் கதையாம். கேஜிஎஃப் 2 படம் 1000 கோடி கிளப்பில் வெகு விரைவில் இணைய உள்ள நிலையில், கேஜிஎஃப் 3 படம் உருவாக உள்ளது.

கேஜிஎஃப் 3 ல் பதில் இருக்கு

கேஜிஎஃப் 3 ல் பதில் இருக்கு

கேஜிஎஃப் 2 படத்தின் இறுதியில் ராக்கி பாயை தாக்க இந்திய கடற்படை, ராணுவம் தேடிக் கொண்டிருக்கையில் மொத்த தங்கத்தையும் ஒரு கப்பலில் ஏற்றிக் கொண்டு ராக்கி பாய் செல்வார். அப்போது இந்தோனேஷிய கப்பல் ஒன்று, ராக்கி பாயின் கப்பலை நோக்கி வருவதாக காட்டுவார்கள். இதை பார்த்த அனைவருக்கும் சம்பந்தமே இல்லாமல் இந்தோனேஷிய கப்பலை எதற்காக காட்டுகிறார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கும். ஆனால் இதில் தான் கேஜிஎஃப் சாப்டர் 3 ன் கதையே ஆரம்பமாக போகிறதாம்.

Recommended Video

K.G.F: Chapter 2 Review in Tamil | கே ஜி எஃப் 2 விமர்சனம் | Yessa ? Bussa ? | |Yash | Sanjay Dutt
இதுதான் கேஜிஎஃப் 3 ன் கதையா

இதுதான் கேஜிஎஃப் 3 ன் கதையா

அதாவது கடலில் மூழ்கும் ராக்கி பாய், இந்தோஷிய கப்பலின் உதவியுடன் நீர்மூழ்கி கப்பலை பயன்படுத்தி தப்பித்து விடுகிறாராம். பிறகு உலக அளவில் பெரிய மான்ஸ்டர் ஆகிறார் என்பது தான் சாப்டர் 3 ன் கதையாம். இந்த படத்தின் ஆரம்பமே செம அதிரடியாக, மிரட்டலாக, பிரம்மாண்டமாக இருக்க போகிறதாம். கேஜிஎஃப் 3 படத்தின் கதை லீக்காகி விட்டதால் இந்த படமும் நிச்சயம் 1000 கோடி வசூலை எட்டும் என இப்போதே ரசிகர்கள் முதல் சினிமா கணிப்பாளர்கள் வரை முடிவு செய்து விட்டார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X