Don't Miss!
- Technology
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- News
"பிஜேபி B டீம்".. நாம் தமிழர் கட்சி "மேனகா"வின் கணவர் பாஜக நிர்வாகியா.. நவநீதன் ஆவேச மறுப்பு.. பரபர
- Finance
மத்திய பட்ஜெட் 2023: வருமான வரி குறைப்பால் எவ்வளவு பணம் மிச்சம்..!
- Lifestyle
கேந்திர திரிகோண ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த ராசிகளுக்கு தொழிலில் அமோக வெற்றி கிடைக்க போகுது..
- Automobiles
இதுகளோட வருகைக்குதான் ரொம்ப நாளா வெயிட் பண்றோம்! டூவீலர் லவ்வர்ஸ்க்கு இந்த மாசம் செம்ம தீனி காத்திட்டு இருக்கு
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
KGF யாஷ் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் இதோ!
இந்தியாவில் கடந்த ஆண்டு வெளியான படங்களில் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் தான் அதிகம் வசூல் செய்த படங்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது, இதன் காரணமாக ரசிகர்கள் கேஜிஎஃப் நாயகன் யாஷ் நடிக்கும் அடுத்த படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். தனது அடுத்த படத்தின் அப்டேட்டை யாஷ் எப்போது வெளியிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில் ஜனவரி 5ம் தேதி யாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். பதிவை பார்க்கையில் அவர் தற்போது ஒரு படத்தின் வேளையில் ஈடுபட்டு இருப்பதாகவும், அடுத்த படம் குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

இந்த பதிவில், "ஆண்டு முழுவதும் உங்கள் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சி, குறிப்பாக எனது பிறந்தநாளில், என் இதயத்தை நன்றியுணர்வுடன் நிரப்புகிறது. நான் எப்போதுமே எனது பிறந்தநாளில் பிறந்தநாள் நாயகனாக இருந்ததில்லை, ஆனால் பல ஆண்டுகளாக உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் ஒருவனாக இருந்துள்ளேன். நான் இந்த நாளில் பிறந்ததால் தான் உங்களை என்னால் சந்திக்க முடிந்தது, அதனால் இந்த நாளே சிறப்பாக ஆகியுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் கூறுகையில், நான் எனக்கு விருப்பமானவற்றில் நம்பிக்கையோடு வெற்றிபெற கடினமாக உழைக்கிறேன். நான் பெரிய அளவில் நினைக்கவும் மற்றும் சிறப்பாக இருக்கவும் எனக்கு மிகப்பெரிய சக்தியாக இருப்பது நீங்கள் தான். அடுத்ததாக நான் உங்களைச் சந்திக்கும் போது, ஒரு சிறப்பான செய்தியையும், அதுபற்றிய அனைத்து விவரங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதைச் செய்ய, எனக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை, இதனை ஜனவரி 8 ஆம் தேதிக்குள் தெரிவிப்பது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. எனவே, இந்த ஆண்டு நான் உங்களிடம் இருந்து ஒரு சிறப்பான பரிசை எதிர்பாக்குறேன், அந்த பரிசு உங்களின் பொறுமை மற்றும் புரிதல் ஆகியவை தான்.

ஏற்கனவே வெளியான சில செய்திகளின்படி, நடிகர் யாஷ் ஜனவரி 8 ஆம் தேதி, அதாவது அவரது பிறந்தநாளில் அடுத்தகட்ட படம் பற்றிய செய்திகளை அறிவிப்பார் என்று செய்திகள் வெளியானது. தற்போது யாஷ் நடிக்கும் படம் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. யாஷ் நடிக்கும் இந்த படத்தை மஃப்டி படத்தின் தயாரிப்பாளர் நர்த்தன், இயக்குவார் என்று கூறப்படுகிரது, இதுதவிர இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.