Just In
- 13 min ago
ஃபிட்னஸ் முக்கியம் வாத்தியாரே.. 12 கி.மீ சைக்கிள் மிதித்து ஷூட்டிங்கிற்கு சென்ற பிரபல நடிகை!
- 43 min ago
பாய்க்குள் சுருட்டி அனுப்பப்பட்ட ஷிவானி.. சர்ப்ரைஸ் ஆன ஹவுஸ்மேட்ஸ்.. பாலாவை கண்டுக்கவே இல்லையே?
- 2 hrs ago
ஒரே செக்கில் Plymouth Car! ராஜ சுலோச்சனா - ரீவைண்ட் ராஜா ஸ்பெஷல்!
- 2 hrs ago
10 லட்சத்துக்கு ஆசைப்பட்டாரா ரியோ? 5 லட்சப் பெட்டியுடன் ஸ்மார்ட்டா எஸ்கேப்பான கேபி.. சூப்பர் கேம்!
Don't Miss!
- Sports
வாய்ப்பு கொடுக்க முடியாது எனில்.. ஏன் அணியில் எடுத்தீர்கள்.. முக்கிய வீரரால் சர்ச்சை.. என்ன நடந்தது?
- Automobiles
ஜனவரி 26ல் வெளிவரும் புதிய கேடிஎம் பைக்!! அட்வென்ச்சரா? அல்லது ஆர்சி-யா?, விபரம் உள்ளே
- News
அந்த "இலை காலியா இருக்கு பாருங்க.." அன்பான மனசு இருக்கே.. அதுதான் ராகுல் காந்தி.. அசந்து போன மக்கள்!
- Finance
450 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. டாப் 30 நிறுவனங்கள் அதிகச் சரிவு..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
இந்திய இராணுவ தினம் குறித்து தொிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வந்துட்டாருயா ராக்கி பாய்.. ஒரே நேரத்தில் 5 மொழிகளில்.. கே.ஜி.எப்2.. அக்டோபர் 23 ரிலீஸ் !
சென்னை : 2018ன் மாபெரும் வெற்றி பெற்ற கே.ஜி.ஃஎப் படத்தின் இரண்டாம் பாகம் அக்டோபர் 23 தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
கே.ஜி.எப் படம் யாஷ்க்கு தமிழ் சினிமா பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது.. கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியான இந்த படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
முக்கியமாக தமிழில் யாரும் எதிர்பாராத பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது. படம் இந்த அளவுக்கு தமிழில் வெற்றி பெற காரணம் படத்தின் அசத்தலான மனதைத் தொடும் வசனங்கள் தான் காரணம்.
இந்த படம் கன்னட மொழியில் எடுக்கப்பட்டு பின் மற்ற மொழிகளுக்கு ஏற்றவாரு வசனங்கள் மாற்றப்பட்டு படம் வெளியானது. தமிழில் வசனங்களை கே.ஜி.ஆர் அசோக் எழுதியிருந்தார். இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நாகராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர்.

ரசிகர்களுக்கு நன்றி
சென்னையில் பல விழாக்களில் கலந்து கொள்ள வந்த யாஷ், தமிழ் சினிமா எனக்கு பெரிய வெற்றியை பரிசளித்து இருக்கிறார்கள். உங்கள் அன்புக்கும், பாசத்திற்கும் நன்றி தெரிவித்திருந்தார். ஒரு விழா மேடையில், கே.ஜி.எப் வசனத்தை பேசி தமிழ் ரசிகர்களை உற்சாகமடையச் செய்தார். பெரும்பாலான டப்பிங் படங்கள் மற்ற மொழிகளில் வெற்றி பெறுவது பெரும் சிரமம் அதை முறியடித்தது கே.ஜி.ஃஎப் படம்.

ரசிகர்கள் ஆர்வம்
முதல் பாகத்தின் இறுதியிலே கதை இன்னும் மிச்சம் இருக்கிறது என்று தான் முடித்திருப்பார்கள் அப்போதிலிருந்தே இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று அனைவரும் காத்திருந்தனர். அவர்களின் காத்திருப்புக்கு தற்போது விடை கிடைத்து விட்டது .இந்த முறையும் கே.ஜி.எஃப் ஒரே நாளில் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இதனை போஸ்டரின் மூலம் உறுதி செய்துள்ளது படக்குழு.

ஐந்து மொழிகளில்
இந்த அறிவிப்பு வந்ததில் இருந்து ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர். பலரும் ராக்கி பாய் வந்துட்டாரு என்று உற்சாகத்துடன் கே.ஜி.ஃஎப் பற்றி சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர் . ராக்கி பாயாக நடித்திருக்கும் யாஷ், பேருந்து நடத்துனரின் மகனாவார் இவரின் இந்த வெற்றி நிச்சயம் கொண்டாட பட வேண்டியதே.

தனி அடையாளம்
இவர் இதற்கு முன் நடித்த படங்கள் அனைத்தும் ஆக்ஷ்ன் படமாக இருந்தாலும் கே.ஜி.ஃஎப் படம் தான் அவருக்கு என்று, ஒரு தனி அடையாளத்தை கொடுத்துள்ளது. அதாவது யாஷ் என்ற பெயர் மறைந்து ராக்கி பாய் என்ற அடையாளத்தை கொடுத்துள்ளது. இரண்டாம் பாகத்தில் ராக்கி பாய் எப்படி மிரட்டப்போகிறார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.