»   »  தெலுங்கில் மரண மாஸ் காட்டிய 'கத்தி' ரீமேக்கின் டீஸர்: சிரு இஸ் பேக்

தெலுங்கில் மரண மாஸ் காட்டிய 'கத்தி' ரீமேக்கின் டீஸர்: சிரு இஸ் பேக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கைதி எண் 150ன் டீஸர் வெளியான 3 மணிநேரத்தில் 1 மில்லியன் பேர் அதை பார்த்துள்ளனர்.

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படம் தெலுங்கில் கைதி எண் 150 என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. படம் ஜனவரி 13ம் தேதி ரிலீஸாகிறது.

படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடித்துள்ளார். இது சிரஞ்சீவியன் 150வது படமாகும்.

டீஸர்

டீஸர்

கைதி எண் 150 படத்தின் டீஸர் நேற்று வெளியானது. டீஸர் வெளியான மூன்றே மூன்று மணிநேரத்தில் யூடியூபில் அதை 10 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

சிரஞ்சீவி

எனக்கு பிடித்ததை தான் பார்ப்பேன், பிடித்ததை தான் செய்வேன் கட்டாயப்படுத்தினால் தலையை எடுத்துவிடுவேன் என்று டீஸரில் சிரஞ்சீவி மரண பன்ச் வசனம் பேசியுள்ளார்.

மாஸ்

மாஸ்

டீஸரை பார்த்தாலே சிரஞ்சீவி இஸ் பேக் என்று தெரிகிறது. வயதானாலும் படத்தில் அவரது தோற்றம் முதுமையாகத் தெரியவில்லை. சிரஞ்சீவிகாரு மரண மாஸ்காரு என தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

கத்தி ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். வில்லனாக பாலிவுட் நடிகர் தருண் அரோரா நடித்துள்ளார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

English summary
Chiranjeevi's upcoming movie Khaidi No 150's teaser is out. The teaser has got 1 million views in just three hours of release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil