»   »  பவர் ஸ்டாருக்காக சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க தயங்கும் குஷ்பு?

பவர் ஸ்டாருக்காக சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க தயங்கும் குஷ்பு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க குஷ்புவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

கபாலி படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பா. ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார். தனுஷ் தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் ஹீரோயினாக நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

Khushbu to act in Rajinikanth-Ranjith movie?

படப்பிடிப்பு வரும் மே மாதம் மும்பையில் துவங்க உள்ளது. இந்நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க குஷ்புவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

குஷ்பு தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதால் டேட்ஸ் பிரச்சனை வருமோ என நினைத்து ரஜினி படத்தில் நடிக்க இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லையாம்.

ரஜினியும், குஷ்புவும் மன்னன், பாண்டியன், அண்ணாமலை ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Khushbu Sundar might land a pivotal role in superstar Rajinikanth's yet-untitled next outing, to be directed by "Kabali" fame Pa. Ranjith, a source said.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil