For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எ‌ன்றும் இளமை நாயகி குஷ்புக்கு இன்று பிறந்தநாள்.. பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து!

  |

  சென்னை : தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் குயினாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை குஷ்பூ இன்று தமிழ் சினிமாவின் சிறப்புமிக்க நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

  Recommended Video

  V-CONNECT | ACTRESS KHUSHBOO CHAT PART-02 | எனக்கு photoshoot னா அலர்ஜி | FILMIBEAT TAMIL

  தென் இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள இவர் 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்து ரசிகர்களின் நாடித் துடிப்பாக வந்தவர்.

  நடிகை, தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டுள்ள நடிகை குஷ்பூ செப்டம்பர் 29 ஆம் தேதியான இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருவதை யொட்டி திரைப் பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

   அஜித் இரங்கல் தெரிவித்தாரா இல்லையா என்பது இப்போது அவசியமா? பிரஸ்மீட்டில் கடுப்பான எஸ்பி சரண்! அஜித் இரங்கல் தெரிவித்தாரா இல்லையா என்பது இப்போது அவசியமா? பிரஸ்மீட்டில் கடுப்பான எஸ்பி சரண்!

  சவால் விட்டவர்

  சவால் விட்டவர்

  ஹீரோயினுக்கு உரித்தான வரையறையாக ஸ்லிம்மான தேகம், அழகான உடலமைப்பு, கவர்ச்சி காட்டுதல் என இருந்து வந்த காலத்தில், க்யூட்டான சப்பி ஹீரோயினாக வந்து களமிறங்கி அதிரடி காட்டி பல முன்னணி நடிகைகளுக்கும் சவால் விட்டவர் நடிகை குஷ்பூ.

  முன்னணி நடிகர்களுடனும்

  முன்னணி நடிகர்களுடனும்

  இந்தி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் ஹீரோயினாகவும் நடித்து வந்த குஷ்பூ 1990களில் தென்னிந்தியாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, சத்யராஜ், மம்முட்டி, வெங்கடேஷ், நாகார்ஜுனா என தென்னிந்தியாவின் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து தனக்கான பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர்.

  சிலை வைத்து கொண்டாடி

  சிலை வைத்து கொண்டாடி

  இந்திய வரலாற்றிலேயே எந்த ஒரு ஹீரோயினுக்கும் கிடைக்காத பெயரும் புகழும் பெற்றிருந்த நடிகை குஷ்பூவின் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருந்த இவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் சிலை வைத்து கொண்டாடி அழகு பார்த்தனர்.

  பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனை தகர்த்திய

  பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனை தகர்த்திய

  இவ்வாறு பல்வேறு புகழுக்கும் சிறப்புகளுக்கும் பெயர் போன நடிகை குஷ்பூ தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனை தகர்த்திய எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

  எவர்கிரீன் ஹீரோயினாக

  எவர்கிரீன் ஹீரோயினாக

  சின்னத்தம்பி, நாட்டாமை, வருஷம் 16, மைக்கல் மதன காமராஜன், அண்ணாமலை, கிழக்கு வாசல், வெற்றி விழா, நடிகன் என சொல்லிக்கொண்டே போகலாம் அவ்வாறு எண்ணற்ற திரைப்படங்களை கொடுத்து இன்றுவரை எவர்கிரீன் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

  மீசைய முறுக்கு

  மீசைய முறுக்கு

  நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வெற்றி நடை போட்டு வரும் இவர் கிரி, கலகலப்பு, மீசைய முறுக்கு, நட்பேதுணை உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார்.

  தொகுத்து வழங்கியுள்ளார்

  தொகுத்து வழங்கியுள்ளார்

  தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வரும் இவர் நந்தினி, நந்தினி 2, லக்ஷ்மி ஸ்டோர் உள்ளிட்ட பல வெற்றி தொடர்களிலும் நடித்து அசத்தி வருகிறார். மேலும் ஜாக்பாட், சிம்ப்ளி குஷ்பூ, நிஜங்கள், கெட் ரெடி உள்ளிட்ட பல வெற்றிகரமான நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கியுள்ளார்.

  ரசிகர்கள் கொண்டாட்டம்

  ரசிகர்கள் கொண்டாட்டம்

  இவ்வாறு ரசிகர்களின் எவர்கிரீன் குயினாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை குஷ்பூ செப்டம்பர் 29 ஆம் தேதியான இன்று தனது 50வது பிறந்த நாளை குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதையொட்டி திரை பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களைக் கூறி வரும் நிலையில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.

  English summary
  Khushbu Birthday wishes from fans and celebrities
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X