தீயா வேலை செய்யணும் குமாரு..நாங்கள் வரலாறு படைத்துவிட்டோம் - குஷ்பூ- வீடியோ
சென்னை: நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் ஒருவரை விளாசித் தள்ளியுள்ளார்.
நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளார். தன்னை பற்றி நல்லபடியாக பேசினால் நன்றி சொல்வார், தேவையில்லாமல் சீண்டினால் விளாசிவிடுவார்.
நேற்று அப்படி தான் ஒருவரை விளாசித் தள்ளியுள்ளார்.
வாழ்க்கை
ஒருத்தன் ரொம்ப படுத்துறான்..டேய் நீ தலை கீழே நின்னாலும் நீ ஒரு லூசுதான்...வாழ்க்கையிலே ஜெயிக்கிறதுக்கு 'தீயா வேலை செய்யணும் 'குமாரு'...வெறும் ஜால்ரா அடிச்சு கூஜா தூக்குனா நீ வெளங்குன மாதிரிதான்...போடா.. ஏதாவது வேலை பாரு...சும்மா கிடக்கும் மனது சாத்தானின் பட்டறை என ட்வீட்டினார் குஷ்பு.
அது யாரு?
நீங்கள் இப்படி உக்கிரமாக ட்வீட் போட காரணமான அந்த குமாரு யார் என்று சொல்லுங்க மேடம் என்று பலரும் ட்விட்டர் மூலம் குஷ்புவிடம் கேட்டனர்.
வொர்த் இல்ல
அந்த லூசு ஆளு பற்றி சொல்லும் அளவுக்கு வொர்த் இல்லை. சும்மா கிடக்கும் மனது சாத்தானின் பட்டறை என்று நான் சொன்னது அந்த ஆளுக்கு புரிந்திருக்கும்.
குஷ்பு
அதான் சொன்னேனே...தீயா வேலை செய்யணும் குமாரு..நாங்கள் வரலாறு படைத்துவிட்டோம் அதை மாற்ற முடியாது. என்னை பற்றி நீ எதுவும் தெரிந்து கொள்ளவில்லை கூஜா ராஜா என்று ட்வீட்டியுள்ளார் குஷ்பு. குஷ்பு யாரை பற்றி சொல்கிறார் என்று நெட்டிசன்ஸ் தலைமுடியை பிய்த்துக் கொள்கிறார்கள்.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.