»   »  ரஜினி 2.0 கெடக்கு, குஷ்புவின் 2.0-வை முதலில் பாருங்க

ரஜினி 2.0 கெடக்கு, குஷ்புவின் 2.0-வை முதலில் பாருங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு மீண்டும் ட்விட்டருக்கு வந்துள்ளார்.

நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் படு ஆக்ட்டிவாக இருந்தார். காலையில் எழுந்ததில் இருந்து இரவும் தூங்கச் செல்லும் வரை ட்வீட் செய்தார்.

Khushbu is back in twitter

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி ட்விட்டரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ட்விட்டருக்கு கிட்டத்தட்ட அடிமையாகிப் போனதால் அந்த முடிவை எடுத்தார்.

அதன் பிறகு ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டு வந்தார். இந்நிலையில் இன்று மீண்டும் ட்விட்டருக்கு வந்துள்ளார். வெல்கம் பேக் மேம் என்று ஆளாளுக்கு ட்வீட் போட்டு குஷ்புவை வரவேற்கிறார்கள்.

ட்விட்டருக்கு வந்த வேகத்தில் அனிதாவின் தற்கொலை, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் கொலை, வளர்மதி மீதான குண்டாஸ் குறித்து கருத்து தெரிவித்ததுடன் மத்திய அரசை விளாசியுள்ளார் குஷ்பு.

English summary
Actress cum Congress spokesperson Khushbu Sundar is back in twitter. She left twitter on july 18 to start reading again.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil