»   »  'ப.பாண்டி' ரீமேக்.. ரேவதி கேரக்டரில் நடிக்கவிருப்பது யார்?

'ப.பாண்டி' ரீமேக்.. ரேவதி கேரக்டரில் நடிக்கவிருப்பது யார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
'ப.பாண்டி' ரீமேக்.. ரேவதி கேரக்டரில் நடிக்கவிருப்பது யார்?

சென்னை : தனுஷ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற 'ப.பாண்டி' திரைப்படம் கன்னடத்தில் ரீமேக் ஆக இருக்கிறது. தனுஷை இயக்குநராகவும் அறிமுகப்படுத்திய 'ப.பாண்டி' படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றதோடு வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

'ப.பாண்டி' படத்தின் கன்னட ரீமேக்கான 'Ambi Ning Vayassaytho' படத்தை குருதத்தா கணிகா இயக்குகிறார். இதில் தனுஷ் நடித்த வேடத்தில் சுதீப்பும், ராஜ்கிரண் நடித்த கேரக்டரில் அம்பரீஷும் நடிக்கிறார்கள். ரேவதி கேரக்டரில் சுஹாசினி மணிரத்னம் நடிக்க ஒப்பந்தமாகி பிறகு வெளியேறினார்.

Khushbu or Ramya krishnan may act in Pa.Pandi ramake

'ப.பாண்டி' படத்தில் ராஜ்கிரண், ரேவதி போர்ஷன் வெகுவாக ரசிக்கும்படி இருந்தது. ராஜ்கிரண் கேரக்டருக்கு அம்பரீஷ் நடிக்கும் நிலையில், ரேவதி கேரக்டரில் நடிக்க வேறு நடிகையை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

குஷ்பு மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவரிடமும் இப்படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இருவரில் ஒருவர் விரைவில் ஒப்பந்தம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

English summary
Dhanush directed 'Pa.Pandi' film is to be remade in Kannada. Sudeep is playing the role of Dhanush and Ambarish is playing Rajkiran's role. Suhashini Maniratnam supposed to acted in the role of Revathi and then stepped down. Khushbu or Ramya Krishnan may act in this film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X