twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    30 வருஷம் ஓடிப் போச்சு... சின்னதம்பி ரிலீசை மகிழ்ச்சியுடன் நினைவுபடுத்திய குஷ்பு

    |

    சென்னை : இயக்குனர் பி.வாசு இயக்கிய சின்னதம்பி படம் ரிலீசாகி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த படத்தில் பிரபு, குஷ்பு, மனோரமா, கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதனை நினைவுபடுத்தி, தனது சமூக வலைதள பக்கங்களில் ஆச்சரியம் கலந்து மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் குஷ்பு.

    பிளாக்பஸ்டர் படமாக அமைந்த சின்னதம்பி, ரிலீஸ் செய்யப்பட்ட 9 தியேட்டர்களில் 356 நாட்களுக்கும் மேலாக ஓடியது. சுமார் 45 க்கும் அதிகமான தியேட்டர்களில் 100 நாட்களை கடந்து ஓடியது. இந்த படத்தின் பாடல்கள், காமெடி என அனைத்தும் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது.

    30 ஆண்டு ஓடிப்போச்சு

    இந்த படம் பற்றிய நினைவுகளை இன்று தெரிவித்த குஷ்பு, "சின்னதம்பி... இந்த மாணிக்கம் வெளியாகி 30 ஆண்டுகள். நேரம் மிக வேகமாக ஓடுகிறது. எப்போதும் என் இயக்குனர் பி வாசு சாருக்கு நன்றியுள்ளவளாக இருப்பேன். இசைஞானி இளையராஜா, தயாரிப்பாளர் கே.பாலு (சமீபத்தில் அவரை இழந்தோம்), அப்புறம் எனது ஃபேவரிட் இணை நட்சத்திரம் பிரபு சார் அனைவருக்கும் நன்றியும் அன்பும்" என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    இவ்வளவு காலம் ஆகிவிட்டதா

    இவ்வளவு காலம் ஆகிவிட்டதா

    இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பதிவில், சின்னதம்பி வெளியாகி 30 ஆண்டுகள். இவ்வளவு காலம் ஆனதை நம்ப முடியவில்லை. தமிழ் சினிமாவில் அதற்கு முன்பும், அதற்கும் பிறகும் நடக்காத அதிசயத்தை இந்த படம் நடத்தியது. அதற்கு காரணம் எனது டைரக்டர் பி.வாசு சார் தான். அவர் தான் அந்த படத்தில் நந்தினியாக என்னை நடிக்க வைத்தார். யாரும் பார்க்காத என்னுடைய மற்றொரு முகத்தை காட்டினார்.

    பிரபு தவிர யாராலும் முடியாது

    பிரபு சாருக்கு எனது மிக அன்பான நன்றிகள். அற்புதமான, ஈகோ இல்லாத நடிப்பை க்ளைமேக்சில் வெளிப்படுத்த செய்தவர். வேறு எந்த நடிகரும் இதை செய்ய முடியாது. எனது தயாரிப்பாளர் மறைந்த கே.பாலு, எப்போதும் புத்துணர்ச்சி தரும் பாடல்களை தந்த இசைஞானி இளையராஜா மற்றும் உங்களுக்கும் எனது நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.

    அனைத்து மொழிகளிலும் ஹிட்

    அனைத்து மொழிகளிலும் ஹிட்

    தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற சின்னதம்பி, கன்னடத்தில் 'ராமாச்சாரி' (1991), தெலுங்கில் 'சாந்தி' (1992), இந்தியில் 'அனாரி' (1993) என்ற பெயர்களில் வெளியானது. மற்ற மொழிகளிலும் இந்த படம் பெற்றி படமாகவே அமைந்தது. இதற்கு பிறகு குஷ்பு நடித்த படங்களும், அவர் பிரபுவுடன் இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாகவே அமைந்தது.

    English summary
    khushbu remembers 30 years of chinnathambi movie release and thanked that team
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X