Don't Miss!
- News
நான் கிரிக்கெட் வீரர்! பவுலர்களை பார்த்து பயந்தால் வேலைக்கு ஆகுமா! அமமுக வேட்பாளர் சிவபிரசாத் பளிச்!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Lifestyle
வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லணுமா? இதோ அதை தடுக்கும் சில இயற்கை வழிகள்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தலைவர் 168 படத்தில் குஷ்பு ரோல் இதானாமே.. இணையத்தை கலக்கும் கதை!
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தலைவர் 168 படத்தில் குஷ்புவின் கதாப்பாத்திரம் குறித்த தகவல் ஒன்று றெக்கை கட்டி பறக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 168வது படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ரஜினியின் 168வது படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
இன்ஸ்டாவுக்காக பிளேபாய் போட்டோகிராபரை நாடும் ஹீரோயின்கள்.. ஆத்தாடி.. ரம்யா, யாஷிகா ஸ்டில்ஸை பாருங்க!

படத்தின் தலைப்பு
படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படாததால் தலைவர் 168 என்று குறிப்பிடப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் பெயர் மன்னவன் என்றும் அண்ணாத்த என்றும் வியூகம் என்றும் கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வருகின்றனர். ஆனால் படத்தின் தலைப்பு குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஆயுத பூஜை விடுமுறை
இந்நிலையில் தலைவர் 168 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது படம் முன்னதாகவே ஆயுத பூஜை விடுமுறையில் வெளியாகும் என்று செய்திகள் பரவி வருகின்றன.

இரண்டு மனைவிகள்?
இதனிடையே படத்தின் கதை குறித்தும் அதில் நடிகை குஷ்புவின் ரோல் என்ன என்பது குறித்தும் தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தலைவர் 168 படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு இரண்டு மனைவிகள் என்றும், முதல் மனைவியான குஷ்பு, கணவருடன் ஏற்பட்ட சண்டையால் தனியாக வாழ்கிறார்.

எதிரியாகும் குஷ்பு
இதனை தொடர்ந்து ரஜினியுடன் இரண்டாவது மனைவியாக ஜோடி சேருகிறாராம் மீனா. இதனை தொடர்ந்து ரஜினிக்கு எதிரியாகும் குஷ்பு அவரை பழிவாங்குகிறாராம். இதுதான் தலைவர் 168 படத்தின் கதை என தகவல் பரவி வருகிறது. மேலும் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கதை இதுவா?
தலைவர் 168 படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் படத்தின் கதை இதுதான் என்று இப்படி ஒரு தகவல் இணையத்தில் வலைய வருகிறது. அண்மையில் தலைவர் 168 படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க நடிகை குஷ்பு ஹைத்ராபாத் சென்ற போட்டோக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.