»   »  மாபியாவை அசிங்கப்படுத்தாதீங்க குஷ்பு: ட்வீட்டிய ரசிகர்

மாபியாவை அசிங்கப்படுத்தாதீங்க குஷ்பு: ட்வீட்டிய ரசிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாபியா என்ற வார்த்தைக்கு இது அவமரியாதை. உண்மையான மாபியாவுக்கு கொஞ்சமாவது கவுரம் உண்டு குஷ்புவின் மாபியா ட்வீட்டை பார்த்த ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த நாள் அன்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கட்சி பணி காரணமாக மும்பை சென்றிருந்தார்.

மும்பையில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். இதையடுத்து அவர் விமானம் மூலம் இன்று சென்னை திரும்பினார். சென்னை திரும்பியுள்ள அவர் தமிழக அரசியல் சூழலால் கவலை அடைந்துள்ளார்.

மாபியா

தற்போது தான் நம்ம சென்னைக்கு வந்தேன். பெரும் தலைவர்களின் வரலாறு கொண்ட என் மாநிலம் கிண்டலுக்குள்ளாகியுள்ளது. மேலும் அது தற்போது மாபியா கும்பலின் கையில் உள்ளது என ட்வீட்டியுள்ளார் குஷ்பு.

அவமரியாதை

@khushsundar மாபியா என்ற வார்த்தைக்கு இது அவமரியாதை. உண்மையான மாபியாவுக்கு கொஞ்சமாவது கவுரம் உண்டு குஷ்புவின் ட்வீட்டை பார்த்த ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஃபுல் ஃபார்ம்

@khushsundar தற்போதைய அரசுக்கு எதிராக நீங்கள் ஃபுல் ஃபார்மில் இருக்கிறீர்கள். உங்களை போன்ற துணிச்சலானவர்கள் தான் தற்போது தேவை என்கிறார் மற்றொரு ரசிகர்.

கடவுள்

நாம் மாபியா கும்பலால் சூழப்பட்டுள்ளோம். நம்மை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என ரசிகர் ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

English summary
Tweeples react to actress cum politician Khushbu Sundar's tweet about Tamil Nadu in the hands of mafia gang now.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil