Don't Miss!
- News
1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என் ஹீரோ..அஜய் தேவ்கன் குறித்து குஷ்பூ ட்வீட்..அம்மணிக்கு வரவர இளமை திரும்புதே!
சென்னை : தமிழ் திரையுலகில் தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் குஷ்பு. ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர்.
இவருக்காக ரசிகர்கள் கோவில் கோவில் கூட காட்டியுள்ளனர். அதே போல் முதல் முதலாக ரசிகர்கள் ஒரு நடிகைக்கு கோவில் காட்டியுள்ளார்கள் என்றால் அது இவருக்கு தான்.
இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ, பாலிவுட் ஹீரோ அஜய் தேவ்கனை சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
பிரதாப்
போத்தனின்
கடைசி
படம்
காபி
வித்
காதல்..
நல்ல
நண்பரை
இழந்து
விட்டேன்
என
குஷ்பு
உருக்கம்!

நடிகை குஷ்பு
இயக்குநர் சுந்தர் சியை காதலித்து கரம் பிடித்த நடிகை குஷ்பு திருமணத்திற்கு பின்னர் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தொடர்ந்து அழுத்தமான கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்கள், திரைப்பட தயாரிப்பு, சீரியல், அரசியல் என படு பிஸியாக இருக்கிறார்.

அண்ணாத்த படத்தில்
குஷ்பு அண்மையில் ரஜினிகாந்துடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். பாண்டியன், மன்னன், அண்ணாமலை படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதேபோல மீனாவுடம் நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார். இருவரும் இப்படத்தில் ரஜினிக்கு முறைப்பெண்ணாக நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

எனது ஹீரோ
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்னுடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், எனது ஹீரோவைச் சந்திப்பது ஒரு கனவாகும்.. அவரின் எளிமை, பணிவு மற்றும் அவரின் அணுகுமுறையால் என்னைத் திணறடித்துவிட்டார். அதில் போலி எதுவும் இல்லை. உண்மையில் நான் அவரின் ரசிகை. உங்கள் நேரத்தையும் அரவணைப்பையும் என் மீது பொழிந்ததற்கு நன்றி. விரைவில் மீண்டும் சந்திப்போம் என கூறியுள்ளார்.

லைக்குகளை பெற்ற போட்டோ
இணையத்தில் வெளியான இந்த புகைப்படம் பல லைக்குகளை பெற்று வருகிறது. வரவர இளமைக்கு திரும்பி வரும் குஷ்பு டாப் மற்றும் ஒரு ஜோடி ஜீன்ஸில் வசீகரமாக இருந்தார். அதே போல, அஜய் கருப்பு நிற உடையுடன் சன்கிளாஸ் அணிந்திருந்தார். அஜய் தேவ்கன் தற்போது ஹிந்தியில் வரவிருக்கும் 'த்ரிஷ்யம் 2' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது.