என் கனவுக் கண்ணன்.. அரவிந்த் சாமிக்கு ஹார்ட்டீன் விட்ட குஷ்பு.. டிரெண்டாகும் க்யூட் புகைப்படங்கள்!

சென்னை: அரவிந்த் சாமி உடன் நடிகை குஷ்பு எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு மை ட்ரீம் என கேப்ஷன் போட்டுள்ளார். அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்களும் சினிமா பிரபலங்கள் ரொம்ப க்யூட்டாக இருக்கு என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

நடிகை குஷ்பு சமீபத்தில் விஜய்யின் வாரிசு படத்தில் நடித்திருந்தார். ரியாலிட்டி ஷோ, சின்னத்திரை, சினிமா, தயாரிப்பு என படு பிசியாக இயங்கி வருகிறார் குஷ்பு.

வாரிசு படத்தில் அவர் நடித்த காட்சிகள் கடைசி நேரத்தில் முழுவதுமாக எடிட் செய்யப்பட்டு விட்டது ரசிகர்களை அப்செட் ஆக்கியது.

வாரிசு படத்தில்

வாரிசு படத்தில்

வாரிசு படத்தில் நடித்து விட்டு நான் நடிக்கவே இல்லையே என குஷ்பு பேட்டி கொடுத்த நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள் அவருடைய போர்ஷன் முழுவதும் எடிட்டிங்கில் தூக்கப்பட்டது தெரிந்து தான் அப்படி பேசி இருக்கிறார் என ட்ரோல் செய்து வந்தனர். விஜய் மற்றும் ராஷ்மிகாவுடன் இணைந்து வாரிசு படத்தில் குஷ்பு எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் எல்லாம் வெளியானது. இசை வெளியீட்டு விழாவிலும் விஜய் குஷ்பு பற்றி பாராட்டி பேசிய நிலையில், படத்தில் கடைசி வரை குஷ்பு எங்க சார் வராங்க என ரசிகர்கள் தேடித் தேடி தேய்ந்து விட்டனர்.

செம பிசி

செம பிசி

சினிமா, சீரியல், ரியாலிட்டி ஷோ, தயாரிப்பு மற்றும் அரசியல் என படு பிசியாக சுழன்று சுழன்று வேலை செய்து வருகிறார் நடிகை குஷ்பு. உடல் எடையை குறைத்ததில் இருந்தே செம ஸ்லிம்மான உடம்புடன் எடுத்துக் கொள்ளும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் போட்டு லைக்குகளை குவித்து வரும் நடிகை குஷ்பு லேட்டஸ்ட்டாக பிரபலம் ஒருவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

அரவிந்த் சாமியுடன் குஷ்பு

அரவிந்த் சாமியுடன் குஷ்பு

ஹீரோவாகவும், வில்லனாகவும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் அரவிந்த் சாமி கங்கனா ரனாவத்தின் தலைவி படத்தில் எம்ஜிஆராக நடித்து இருந்தார். கடைசியாக குஞ்சக்கோ போபன் உடன் இணைந்து ரெண்டகம் படத்தில் நடித்த அரவிந்த் சாமி அடுத்து ஏகே62 படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், நடிகை குஷ்பு உடன் அரவிந்த் சாமி எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

காதலிக்காம இருக்க முடியுமா

காதலிக்காம இருக்க முடியுமா

எப்படி ஒருவரால் இந்த மனுஷனை பார்த்து விட்டு காதலில் விழாமல் இருக்க முடியும் என கேப்ஷன் கொடுத்து ஏகப்பட்ட ஹார்ட்டீன்களையும் நடிகை குஷ்பு பதிவிட்டு அரவிந்த் சாமியுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். பிக் பாஸ் அர்ச்சனா உள்ளிட்ட பிரபலங்கள் எனக்கு கூட அவர் மீது காதல் இருக்குங்க என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

மை ட்ரீம்

மை ட்ரீம்

ஹார்டீன்களை வெளியிட்டு அரவிந்த் சாமியை பார்த்து காதலிக்காம இருக்க முடியுமா என உருகிய நடிகை குஷ்பு மை ட்ரீம் என்றும் கேப்ஷன் போட குஷ்புவுக்கும் அரவிந்த் சாமி எந்தளவுக்கு பிடிச்சிருக்குன்னு இதிலேயே தெரிகிறது என ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். இருவரும் இணைந்து சீக்கிரமே நடிக்கப் போறீங்களா? என்றும் கமெண்ட்டுகள் விழுந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X