22வது திருமண நாளிலும் எவ்ளோ ரொமான்ஸ் பாருங்க.. சுந்தர் சிக்கு சூப்பராக வாழ்த்து சொன்ன குஷ்பு!

சென்னை: இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்பு தங்களது 22வது திருமண நாள் விழாவை இன்று கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

Recommended Video

V-CONNECT | ACTRESS KHUSHBOO CHAT | சுந்தர் c காதலை சொன்ன விதம் | FILMIBEAT TAMIL

ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சுந்தர் சி உடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து நடிகை குஷ்பு காதலுடன் திருமண நாள் வாழ்த்துக் கூறி பதிவிட்டுள்ள பதிவு பலரது பார்வைகளை கவர்ந்து வருகிறது.

சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் இந்த நட்சத்திர தம்பதியினருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

குஷ்பு திருமணம்

குஷ்பு திருமணம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பு கடந்த 2000ம் ஆண்டு இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டார். மார்ச் 9ம் தேதி 2000ம் ஆண்டு நடைபெற்ற இவர்களது திருமணத்துக்கு ஏராளமான சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினர். இந்த நட்சத்திர தம்பதியினருக்கு அவந்திகா மற்றும் ஆனந்திதா என இரு மகள்கள் உள்ளனர்.

22வது திருமண நாள்

22வது திருமண நாள்

2000ம் ஆண்டு தொடங்கிய இந்த அருமையான திருமண பந்தம் 2022ம் ஆண்டில் 22வது திருமண நாளை காதலுடன் கொண்டாடி வருகிறது. நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், "என் வாழ்நாளில் பாதியை உங்களுடன் கழித்துள்ளேன். இதற்கு மேல் வேற என்ன வேண்டும். இன்று நம்முடைய 22வது திருமண நாள் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். இதை விட சிறப்பு வேறு எதுவும் இருக்க முடியாது. ஹேப்பி ஆனிவர்ஸரி மை லவ் இன்னும் பல ஆண்டுகள் இதே போல மகிழ்ச்சியுடன் இணைந்து வாழ வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

பிருந்தா மாஸ்டர் வாழ்த்து

பிருந்தா மாஸ்டர் வாழ்த்து

குஷ்புவின் நெருங்கிய தோழியும் நடன இயக்குநருமான பிருந்தா மாஸ்டரும் திருமண நாள் வாழ்த்துக்களை குஷ்புவிற்கு தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஹே சினாமிகா படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்த பிருந்தா மாஸ்டருக்கு குஷ்பு தனது முழு ஆதரவையும் அன்பையும் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குவியும் வாழ்த்துக்கள்

குவியும் வாழ்த்துக்கள்

நடிகை குஷ்புவும் இயக்குநர் சுந்தர் சியும் தங்களது 22வது திருமண நாள் விழாவை இன்று கொண்டாடி வரும் நிலையில், ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் அன்பான ரசிகர்களும் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X