பிரபு தோளில் சாய்ந்து சிரிக்கும் குஷ்பு.. அந்த பக்கம் யாரு தெரியுமா? வாரிசு ஷூட்டிங் ஸ்பாட் க்ளிக்ஸ்

சென்னை: ராஷ்மிகா மந்தனா தான் விஜய்யுடன் எடுத்த செல்ஃபி போட்டோவை போடுவாரா.. நான் என் ஹீரோக்களோட போட்டோ போடுறேன்னு குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

இந்த சைடு சின்னத்தம்பி, அந்த சைடு நாட்டாமை நடுவில் குஷ்பு என வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார் நடிகை குஷ்பு.

வாரிசு படத்தின் 100வது நாள் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்ற நிலையில், ஏகப்பட்ட போட்டோக்கள் வெளியாகி வருகின்றன.

100வது நாள்

100வது நாள்

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் வாரிசு படத்தின் 100வது நாள் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட தளபதி விஜய் என்கிற ஹாஷ்டேக்கையே டிரெண்ட் செய்து நேற்று விஜய் ரசிகர்கள் தெறிக்கவிட்டனர்.

ராஷ்மிகா மட்டும் தான் போடுவாரா

ராஷ்மிகா மட்டும் தான் போடுவாரா

இந்நிலையில், ராஷ்மிகா மட்டும் தான் அவரோட ஹீரோவுடன் எடுத்த போட்டோவை போடுவாரா, நான் போடுகிறேன் பாருங்க என வாரிசு படத்தில் இணைந்து நடித்து வரும் பிரபு மற்றும் சரத்குமார் உடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதகளம் செய்துள்ளார்.

சின்னத்தம்பி, நாட்டாமை

சின்னத்தம்பி, நாட்டாமை

வாரிசு படத்தில் சீனியர் நடிகர்களின் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்நிலையில், நடிகை குஷ்பு இந்த சைடு சின்னத்தம்பி மற்றும் அந்த சைடு நாட்டாமையுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை போட்டு ரசிகர்கள் கண்களுக்கு விருந்து கொடுத்துள்ளாரே என ஏகப்பட்ட பிரபலங்களும் ரசிகர்களும் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

பிரபு தோளில் சாய்ந்து

பிரபு தோளில் சாய்ந்து

சரத்குமார் மற்றும் பிரபு இருவருடன் இருந்தால் டல் அடிக்கும் தருணங்களே இருக்காது என புன்னகையுடன் மூவரும் இருக்கும் சில போட்டோக்களை ஷேர் செய்த நடிகை குஷ்பு, நடிகர் பிரபுவின் தோளில் சாய்ந்தபடி இருக்கும் ஒரு போட்டோவையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட அந்த போட்டோ சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

வாரிசு பொங்கல்

வாரிசு பொங்கல்

வாரிசு படத்தின் டீசர் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்றும், அதன் இசை வெளியீட்டு விழா டிசம்பரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேமிலி எண்டர்டெயின்மென்ட் படமாக வரும் பொங்கலுக்கு நடிகர் விஜய்யின் வாரிசு வெளியாக காத்திருக்கிறது. அதன் ப்ரீ ரிலீஸ், டிஜிட்டல் உரிமைகள் என ஏகப்பட்ட பிசினஸ்கள் இப்பவே களைகட்டி வருகின்றன.

பொன்னியின் செல்வனிலும்

பொன்னியின் செல்வனிலும்

வாரிசு படத்திற்கு முன்பாகவே இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் பிரபு இணைந்து நடித்துள்ளனர். தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து நடித்து வரும் நிலையில், ஏகப்பட்ட பழைய நினைவுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. பொன்னியின் செல்வன், வாரிசு என அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்து அசத்த உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X