சூர்யாவை கலாய்த்த விஜேக்களுக்கு செம டோஸ் விட்ட குஷ்பு
சென்னை: சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்தவர்களை விளாசியுள்ளார் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு.
சன் மியூசிக் தொலைக்காட்சியில் பணியாற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளினிகளான சங்கீதா மற்றும் நிவேதிதா ஆகியோர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்துள்ளனர்.
இதை பார்த்து சூர்யா ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.
ஆதரவு
உயரமோ இல்லையோ, குண்டோ ஒல்லியோ, சிவப்போ கருப்போ அது முக்கியம் அல்ல. தனது செயல்கள் மூலம் ஒருவர் எவ்வளவு உயர்ந்து நிற்கிறார் என்பதே முக்கியம். சூர்யாவை பற்றி தவறாக பேசியவர்கள் வெட்கப்பட வேண்டும். இது உங்களின் குணத்தை காட்டுகிறது. மன்னிப்பு கேளுங்கள் என்று ட்வீட்டியுள்ளார் குஷ்பு.

விஷால்
மூத்த நடிகரான சூர்யாவை அசிங்கப்படுத்திய சங்கீதா மற்றும் நிவேதிதா மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர் சங்கம் சார்பில் சன் தொலைக்காட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அமைதி
சூர்யாவை தரக்குறைவாக பேசியதை பார்த்து கோபம் அடைந்த ரசிகர்கள் சன் டிவி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை பார்த்த சூர்யா அவர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

குணம்
தன்னை சங்கீதா, நிவேதிதா அசிங்கப்படுத்தியதை சூர்யா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதை பெரிய விஷயமாக்க வேண்டாம் என்று தனது ரசிகர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











