Don't Miss!
- News
கல்லூரி வளாகத்தில் மாணவி தொழுகை.. கிளம்பிய எதிர்ப்பு.. பறந்து வந்த அதிரடி உத்தரவு! அதிரும் குஜராத்
- Travel
சென்னை மின்சார ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் – இனி ரயிலில் அதிக பெட்டிகள்!
- Technology
ரூ.10,000 பட்ஜெட்டில் புதிய 5G போன் வாங்க ரெடியா? மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த Motorola.!
- Lifestyle
இந்த மசாலா பொருட்களை உங்க பர்ஸில் வைத்திருந்தால்... உங்க வீட்டில் செல்வ மழை பொழியுமாம் தெரியுமா?
- Finance
தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. இனியும் சரியுமா?
- Automobiles
இந்த சர்க்கஸ் பயணம் தேவையா...? பெங்களூர் டிராஃபிக்கை பற்றி தெரியாது போல!! இணையத்தில் வைரலாகும் வீடியோ
- Sports
உலகக்கோப்பையில் அஸ்வின் கேட்ட மாற்றம்.. கேப்டன் ரோகித் சர்மா ஆதரவுக்குரல்.. நிறைவேற்றுமா ஐசிசி!
- Education
பெட்ரோலிய கழகத்தில் ரூ.81 ஆயிரத்தில் பணி வாய்ப்பு...!
Vikrant Rona Box Office Collection: விமர்சனத்தை தாண்டி வசூல் வேட்டையாடிய விக்ராந்த் ரோணா!
சென்னை: கிச்சா சுதீப்பின் பிரம்மாண்ட 3டி படமான விக்ராந்த் ரோணா படத்திற்கு விமர்சனங்கள் மோசமாக வந்தாலும், முதல் நாள் படத்தின் வசூல் அதிகமாகவே உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இயக்குநர் அனுப் பந்தாரி இயக்கத்தில் கிச்சா சுதீப், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் நடிப்பில் நேற்று வெளியானது விக்ராந்த் ரோணா.
கர்நாடகாவில் மட்டுமே படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்ததாகவும், மற்ற மாநிலங்களில் பெரிய ஈர்ப்பு இல்லாத நிலையிலும், முதல் நாளில் நல்ல வசூலை படம் அள்ளி உள்ளதாக கூறுகின்றனர்.
நயன்தாரா போல் கல்யாண ஆசை வந்துவிட்டதா கீர்த்தி சுரேஷுக்கு.. புதிய போட்டோஷுட்டில் கலக்கல் போஸ்!

விக்ராந்த் ரோணா கதை
கேஜிஎஃப் 2, சார்லி 777 படங்களின் வெற்றியைத் தொடர்ந்து கன்னட திரையுலகில் அடுத்த பெரிய படமாக வெளியாகி இருக்கிறது விக்ராந்த் ரோணா. நான் ஈ, பாகுபலி உள்ளிட்ட படங்களில் நடித்த கிச்சா சுதீப் நாயகனாக நடித்துள்ள இந்த விக்ராந்த் ரோணா திரைப்படம் த்ரில்லர் இன்வஸ்டிகேஷன் படமாக உருவாகி உள்ளது.

பட்ஜெட்
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த கேஜிஎஃப் 2 திரைப்படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில், விக்ராந்த் ரோணா திரைப்படம் 95 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் மேக்கிங் போல இருப்பதாகவும், நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்கிற எதிர்பார்ப்பில் முதல் நாளே படத்தின் புக்கிங் ஹவுஸ்ஃபுல்லாக ஆனது.

கலவையான விமர்சனம்
விக்ராந்த் ரோணா வித்தியாசமான முயற்சி என்றும், சிறந்த 3டி திரைப்படம் என்றும் கன்னட ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடி வந்தாலும், மற்ற மாநிலங்களில் விக்ராந்த் ரோணா படத்திற்கு மோசமான விமர்சனங்களே குவிந்துள்ளன. படத்தின் திரைக்கதையை இயக்குநர் ரொம்பவே சொதப்பி விட்டார் என்றும், கிச்சா சுதீப் மட்டுமே படத்தை முடிந்த அளவு காப்பாற்றுகிறார் என்றும் கூறியுள்ளனர்.

வசூல் வேட்டை
விமர்சனங்களை எல்லாம் ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு விக்ராந்த் ரோணாவை கன்னட ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடி வருகின்றனர். அடுத்த கேஜிஎஃப் போல இந்த படத்தையும் மிகப்பெரிய வெற்றியடைய வைக்க வேண்டும் என்கிற அவர்களின் முயற்சிக்கு பலனாக முதல் நாளில் உலகம் முழுவதும் 35 முதல் 40 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாகவும் முதல் வார முடிவில் போட்ட முதலை வசூல் செய்து விடும் என்றும் கூறுகின்றனர்.