Just In
- 8 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 8 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 10 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 11 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கேள்வி கேட்ட நடிகர்: வடிவேலு ஸ்டைலில் பதில் அளித்த குட்டிப் பையன்
மும்பை: நீ எங்கிருந்து வருகிறாய் என்று பாலிவுட் நடிகர் விக்கி கவுஷல் கேட்டதற்கு ஒரு சுட்டிப்பையன் அளித்த பதில் தான் மாஸ்.
யுரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாலிவுட் நடிகர் விக்கி கவுஷலுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. தேசிய விருது கிடைத்துள்ளதால் தனக்கு மேலும் பொறுப்பு அதிகரித்துள்ளதாக விக்கி தெரிவித்துள்ளார்.

விக்கி கவுஷல் பூத் - பார்ட் ஒன், தி ஹான்டட் ஷிப் படத்தில் நடித்து முடித்துள்ளார். அவர் தற்போது சர்தார் உத்தம் சிங் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விக்கி அண்மையில் குட்டிப் பையன் ஒருவரை சந்தித்து பேசினார். விக்கி அந்த சிறுவனை தூக்கி வைத்துக் கொண்டு பேசியபோது எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
சுட்டிப் பையனிடம் விக்கி நீ எங்கிருந்து வருகிறாய் என்று கேட்க அவரோ என் வீட்டில் இருந்து என்று பதில் அளித்துள்ளார். பொடியன் தெரிவித்த பதில் குறித்து சமூக வலைதளத்தில் போஸ்ட் போட்டுள்ளார் விக்கி.
தனது ரசிகர்கள் குறித்து அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு வருகிறார் விக்கி. முன்னதாக தான் நடித்த யுரி படத்தை பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர் ராணுவத்தில் சேர்ந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் அவர்.
யுரி படம் தான் விக்கி கவுஷலுக்கு பிரேக் கொடுத்த படம். அதில் அவர் ராணுவ அதிகாரியாக வாழ்ந்திருந்தார் என்று கூட கூறலாம். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹார் அளித்த பார்ட்டியில் கலந்து கொண்டார் விக்கி.
View this post on InstagramThis kid has surely engrossed #vickykaushal ❤ #viralbhayani @viralbhayani
A post shared by Viral Bhayani (@viralbhayani) on
அந்த பார்ட்டியில் எடுத்த வீடியோவை கரண் ஜோஹார் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில் விக்கி அருகே இருந்த வெள்ளை நிற பொடியை பார்த்தவர்கள் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கூறினார்கள். விக்கி மட்டும் அல்ல பார்ட்டியில் கலந்து கொண்ட அனைத்து பாலிவுட் பிரபலங்களும் போதைப் பொருள் உட்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதற்கு கரண் ஜோஹாரோ போதைப் பொருள் உட்கொண்டால் அதை வீடியோ எடுத்து வெளியிடும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. விக்கி அருகே வெள்ளையாக இருந்தது பொடி அல்ல விளக்கின் வெளிச்சம் என்று விளக்கம் அளித்தார். ஆனால் அவர் விளக்கத்தை நம்ப யாரும் தயாராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.