»   »  கிடாரி... சசிகுமாருக்கு ஏன் இந்த கொலவெறி? #Kidaari

கிடாரி... சசிகுமாருக்கு ஏன் இந்த கொலவெறி? #Kidaari

Posted By:
Subscribe to Oneindia Tamil

'அடுத்த நிமிடம் எங்கே நம் கழுத்து அறுபட்டு விடுமோ என்ற அச்சத்துடன் பார்க்க வேண்டியிருக்கிறது... படம் முடிந்து வெளியில் வரும்போதும் மூக்கிலிருந்து ரத்த வாடை அகலாத மாதிரியே இருக்கு...'

- சசிகுமாரின் கிடாரி பார்த்துவிட்டு ரசிகர்கள் சொன்ன கமெண்ட் இது.


Kidaari disappoints film goers

'படத்தின் ஆரம்பம் தொடங்கி, இறுதி வரை பத்து நிமிடத்துக்கு ஒரு கொலையும் ரத்தச் சகதியுமாகச் செல்கிறது படம். கொடூரம், வன்முறை, அதனூடே சில சென்டிமென்ட் மற்றும் காதல் காட்சிகள்.... இதையே தனது பார்முலாவாக வைத்துக் கொண்டிருக்கிறார் சசிகுமார். இந்தப் படத்தோடு இந்தப் பார்முலாவுக்கு குட்பை சொல்லாவிட்டால், சசிகுமார் நிலை ரொம்ப கஷ்டம்தான்...'


- இதுவும் படம் பார்த்த ஒரு ரசிகனின் கருத்துதான்.


சுப்பிரமணியபுரம், போராளி, குட்டிப் புலி, சுந்தரபாண்டியன் என சசிகுமார் முன்பு நடிக்க எல்லாப் படங்களின் காட்சிகளும் இந்தப் படத்தில் ஏதோ ஒரு இடத்தில் எட்டிப் பார்ப்பது மகா அலுப்பாக உள்ளது.


கிராமங்களில் எத்தனை எளிய வாழ்க்கை இருக்கிறது.. அழகான காதல்... அருமையான நகைச்சுவைகள் கிடக்கின்றன. ஆனால் கிராமத்து மனிதர்கள் சதா ரத்தச் சேற்றில் உழன்று கொண்டிருப்பதாகத்தான் இந்த கிடாரி சித்தரிக்கிறது.


கிட்டத்தட்ட 250 அரங்குகளில் வெளியான கிடாரி மீது ஓரளவு எதிர்ப்பார்ப்பு இருந்தது உண்மைதான். ஆனால் முதல் காட்சி முடிந்ததுமே 'அந்த ஆபத்தான மிருகம் இதுதான்.. ஓடிடுங்க' எனும் ரீதியில் சமூக வலைத் தளங்களில் கமெண்டுகள் குவிய, இன்று சனிக்கிழமை கூட எளிதாக டிக்கெட் கிடைக்கும் நிலைதான் இந்தப் படத்துக்கு உள்ளது என்கிறது கோலிவுட் பாக்ஸ் ஆபீஸ்.

English summary
Sasikumar's latest movie Kidaari is not satisfying the film goers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil