»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்:

கிளேடியேட்டர் பட நாயகன் ரஸ்ஸல் குரோவை கடத்தும் சதித் திட்டம் குறித்து அமெரிக்க புலனாய்வுத்துறைவிசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஹாலிவுட் உலகின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ரஸ்ஸல் குரோவை கடத்துவதுகுறித்த சதித் திட்டம் பற்றிய தகவல்கள் பத்திரிகைகளில் வெளியானது. இதனை அடுத்து இது பற்றிய தகவல்களைஅமெரிக்க புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளதாக அமெரிக்க டி.வி. நிகழ்ச்சியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்டர்டெயின்மென்ட டு நைட் என்ற டி.வி.நிகழ்ச்சியில், கடந்த ஜனவரி மாதமே கடத்தல் சதிபற்றி அறிந்தபுலனாய்வுத்துறை, ஜனவரியில் நடந்த கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ரஸ்ஸலுக்கு பாதுகாப்புஅளித்தது. லண்டனில் நடந்த புரூப் ஆப் லைப் திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டரஸ்ஸலுக்கு ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் பாதுகாப்பு அளித்துள்ளனர்.

ரஸ்ஸலின் தகவல் தொடர்பாளரான ராபின் பாம் தெரிவிக்கையில், கடத்தல் சதி பற்றி அமெரிக்க புலனாய்வுத்துறைதெரிவித்தது. ரஸ்ஸல் அமெரிக்க புலனாய்வுத்துறையின் பாதுகாப்ரை கோராமல் தனது அந்தரங்கபாதுகாவலர்களின் பாதுகாப்பில் உள்ளார் என தெரிவித்தார்.

புரூப் ஆப் லைப் படத்தில் கடத்தல்காரர்களிடம் மாட்டியவர்களை மீட்கும் நாயகனாக நடித்த ரஸ்ஸலுக்கு நிஜவாழ்க்கையில் தன்னைத்தானே கடத்தல்காரர்களிடமிருந்த காத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை. அப்படத்தின்நாயகி மெக் ரியானுடனான தனது லீலைகளை கடந்த வாரம் முடித்து கொண்டார் ரஸ்ஸல் என்பதுகுறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil