»   »  பள்ளி மாணவர்களை இப்படி கெடுக்கிறாங்களே: நடிகர் ராணா கவலை

பள்ளி மாணவர்களை இப்படி கெடுக்கிறாங்களே: நடிகர் ராணா கவலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனரோ, நடிகரோ போதைப் பொருள் பயன்படுத்தினால் எனக்கு கவலை இல்லை. ஆனால் பள்ளி குழந்தைகள் போதைப் பொருள் பயன்படுத்துவது எனக்கு கவலையாக உள்ளது என்கிறார் நடிகர் ராணா.

ஹைதராபாத்தில் ரூ. 31 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தெலுங்கு திரையுலக பிரபலங்கள், பெரிய நிறுவனங்களில் பணிபுரிவோர் மற்றும் பிரபல பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் போதைப் பொருள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை குழு விசாரித்து வருகிறது.

நடிகர்

நடிகர்

இயக்குனரோ, நடிகரோ போதைப் பொருள் பயன்படுத்தினால் எனக்கு கவலையே இல்லை. அவர்கள் பெரியவர்கள், என்ன செய்கிறோம் என தெரிந்து செய்கிறார்கள் என்கிறார் நடிகர் ராணா.

பள்ளி குழந்தைகள்

பள்ளி குழந்தைகள்

பள்ளி குழந்தைகள் போதைப் பொருள் பயன்படுத்துவது தான் எனக்கு கவலை அளிக்கிறது. இந்த பிரச்சனையை சீரியஸாக எடுத்துக் கொண்டு தீர்வு காண வேண்டும் என்று ராணா தெரிவித்துள்ளார்.

போதை

போதை

பள்ளி குழந்தைகள் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் போதைப் பொருளை பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு யார் போதைப் பொருள் கொடுப்பது என்று கேள்வி எழுப்பியுள்ளார் ராணா.

ராணா

ராணா

போதைப் பொருள் பயன்படுத்தியதாக ராணாவின் பெயரும் அடிபட்டது. ஆனால் ராணாவுக்கு அந்த பழக்கம் இல்லை என்று அவரது தந்தை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In wake of a major drug bust earlier this month in Hyderabad, actor Rana Daggubati said it worries him and its really dangerous to know that school children have been involved in this racket.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil