»   »  6 இயக்குநர்கள், 4500 துணை நடிகர்கள்... 'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'!

6 இயக்குநர்கள், 4500 துணை நடிகர்கள்... 'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

6 இயக்குநர்கள், 4500 துணை நடிகர்கள் இணைந்து ஒரு படத்தை உருவாக்குகிறார்கள். அந்தப் படத்துக்கு கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க என்று தலைப்பும் சூட்டியுள்ளனர்.

ஹெவன் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க, ரஜாக் இயக்கியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த் இசையமைத்திருக்கிறார்.

 Kilabittangaiyya Kilambittanga

கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் ஆகிய இயக்குநர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். மேலும், 'பவர்ஸ்டார்' சீனிவாசன், ஸ்வாதி, அஸ்மிதா, ரத்திஷ், விஷ்வா, கண்ணன், ராஜ், திவ்யா உள்ளிட்ட 4500 துணை நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

 Kilabittangaiyya Kilambittanga

வாழ்க்கையில் விரக்தியடைந்து, யாருடைய ஆதரவும் இல்லாமல் இருக்கும் நான்கு முதியவர்களுக்கு, அதிக தொகைக்கு பெரிய வேலை ஒன்று வருகிறது. இதை முடிக்க நான்கு முட்டாள் இளைஞர்களின் உதவியை நாடுகிறார்கள். இந்த இளைஞர்களின் செயல்களால், நான்கு முதியவர்கள் சமூகத்தில் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். இறுதியில் இதிலிருந்து நான்கு முதியவர்கள் மீண்டார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதையாம்.

 Kilabittangaiyya Kilambittanga

இதில் கே.பாக்யராஜ் போலீஸ் அதிகாரியாகவும், மன்சூர் அலிகான் காட்டுவாசித் தலைவராகவும், 'பவர்ஸ்டார்' சீனிவாசன் அரசியல்வாதியாகவும் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்திய இப்படத்தில் திரில்லர், ஆக்‌ஷன், திகில் கலந்து உருவாக்கி இருக்கிறார்கள். பெரும்பாலான படப்பிடிப்பு மலைப்பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

English summary
6 seniors, 4500 junior artists playing in a new movie titled Kilabittangaiyya Kilambittanga.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil