»   »  முகமூடி திருடர்கள் பலாத்காரம் செய்துவிடுவார்களோ?: பயந்து நடுங்கிய நடிகை கிம்

முகமூடி திருடர்கள் பலாத்காரம் செய்துவிடுவார்களோ?: பயந்து நடுங்கிய நடிகை கிம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாரீஸ்: முகமூடி திருடர்கள் தன்னை பலாத்காரம் செய்துவிடுவார்களோ என அமெரிக்க நடிகை கிம் கர்தாஷியன் பயந்துள்ளார்.

ஃபேஷன் ஷோவை கண்டு களிக்க அமெரிக்க தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ நடிகை கிம் கர்தாஷியன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு சென்றார். அவருடன் அவரது சகோதரிகளும் சென்றிருந்தனர்.

இந்நிலையில் திங்கட்கிழமை அதிகாலை முகமூடி அணிந்து போலீஸ் உடையில் இருந்த 5 திருடர்கள் கிம்மின் அறைக்குள் புகுந்தனர்.

கிம்

கிம்

திருடர்களை பார்த்த கிம் பயந்துபோய் செல்போனை கையில் எடுக்க அவர்கள் அதை பறித்து வைத்துக் கொண்டனர். கிம்மை படுக்கையில் இருந்து தர, தரவென இழுத்து கை, கால்களை கட்டிப்போட்டு குளியல் அறைக்குள் தள்ளி பூட்டனர்.

நகை கொள்ளை

நகை கொள்ளை

ஹோட்டல் அறையில் கிம் வைத்திருந்த ரூ.74 கோடி மதிப்புள்ள நகைகளை திருடர்கள் திருடினர். அதில் கிம்மின் நிச்சயதார்த்த மோதிரமும் அடக்கம். திருடிவிட்டு அவர்கள் ஹாயாக சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.

பலாத்காரம்

பலாத்காரம்

பிரெஞ்சு மொழியில் பேசிய 5 திருடர்களும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிடுவார்களோ என்று கிம் பயந்து நடுங்கியுள்ளார். இதை கிம்மே போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

பாதுகாவலர்

பாதுகாவலர்

கிம் கர்தாஷியனின் பாதுகாவர் பாஸ்கல் டுவியர் கிம்மின் சகோதரிகள் கோர்ட்னி மற்றும் கென்டாலுடன் நைட்கிளப்பிற்கு சென்றிருந்தார். திருடர்கள் கிளம்பிய பிறகு தான் அவர் ஹோட்டலுக்கு திரும்பி வந்தார்.

English summary
American TV reality star Kim Kardashian feared that 5 French speaking thieves would rape her. Thieves stole Rs. 74 crore worth jewels from her.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil