For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  4வது திருமணத்துக்கு தயாரான கிம் கர்தாஷியன்.. 28 வயது நபரை டேட்டிங் செய்யும் 41 வயது சூப்பர் மாடல்!

  |

  லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரியங்கா சோப்ராவை போலவே இளம் வயது நபரை காதலித்து வருகிறார் நடிகை கிம் கர்தாஷியன்.

  இதுவரை 3 பிரபலங்களை திருமணம் செய்து விவாகரத்து செய்த நிலையில், 28 வயது காமெடியன் பீட் டேவிட்சன் உடன் இரவு நேர டேட்டிங் சென்ற புகைப்படங்களை பகிரங்கமாக ஷேர் செய்துள்ளார் சர்வதேச சூப்பர் மாடலான கிம் கர்தாஷியன்.

  3வது கணவர் கன்யே வெஸ்ட் உடன் சமீபத்தில் விவாகரத்தான நிலையில், அடுத்ததாக இளம் வயது காதலருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறாராம்.

  பீஸ்ட் படத்தை பார்க்க ஊழியர்களுக்கு லீவு... பிரபல நிறுவனம் செஞ்ச வேலையை பாருங்க! பீஸ்ட் படத்தை பார்க்க ஊழியர்களுக்கு லீவு... பிரபல நிறுவனம் செஞ்ச வேலையை பாருங்க!

  கிம் கர்தாஷியன்

  கிம் கர்தாஷியன்

  299 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் அதாவது கிட்டத்தட்ட 30 கோடி ரசிகர்களை உலகளவில் கொண்டுள்ள சூப்பர் மாடல் அழகியாக வலம் வருகிறார் டிவி நடிகை கிம் கர்தாஷியன். அழகு சாதன பொருட்கள், உள்ளாடை விற்பனை என ஏகப்பட்ட பிசினஸ்களிலும் நம்பர் ஒன்னாக ஜொலித்து வருகிறார் கிம் கர்தாஷியன்.

  உச்சகட்ட கவர்ச்சி

  உச்சகட்ட கவர்ச்சி

  உலகின் பல நாடுகளை சேர்ந்த நடிகைகளே இவர் அணியும் கவர்ச்சியான போல்டான உடைகளை அணிந்து கொண்டு தான் விழா மேடைகளில் கெத்துக் காட்டுகின்றனர். அந்த அளவுக்கு உச்சகட்ட கவர்ச்சியாகவும் அரை நிர்வாணமாக போஸ் போட்டு அலற விடுவதிலும் கிம் கர்தாஷியனுக்கு நிகர் கிம் கர்தாஷியன் தான்.

  கணவன்மார்கள்

  கணவன்மார்கள்

  கீப்பிங் அப் வித் கர்தாஷியன் எனும் டிவி தொடர் மூலம் பிரபலமான இவரது திருமண வாழ்க்கையும் உலகம் முழுக்கவே பிரபலம் தான். 2000ம் ஆண்டு டாமன் தாமஸ் என்பவரை திருமணம் செய்த இவர், 2004ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். 2011ம் ஆண்டு கிறிஸ் ஹம்ப்ரைஸ் உடன் திருமணம் நடந்த நிலையில், இருவரும் 2013ம் ஆண்டு பிரிந்தனர். 2014ம் ஆண்டு கன்யே வெஸ்ட் எனும் ராப் பாடகரை மணந்து அவருடன் 4 குழந்தைகளை பெற்றுக் கொண்ட கிம் கர்தாஷியன் இந்த ஆண்டு தொடக்கத்தில் கன்யேவை விவாகரத்து செய்தார்.

  ரொம்ப சின்ன பையன்

  ரொம்ப சின்ன பையன்

  பிரபல நடிகைகள் எல்லாமே தங்களை விட வயது குறைவானவர்களையே காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். நடிகை பிரியங்கா சோப்ராவை போலவே தற்போது கிம் கர்தாஷியனும் இளம் வயது காமெடியன் உடன் டேட்டிங் சென்று வருகிறார். கிம் கர்தாஷியன் 41 வயதை கடந்த நிலையில், அவரது புதிய காதலர் பீட் டேவிட்ஸனுக்கு இப்போதான் 28 வயது நடக்கிறது.

  நைட் டேட்டிங்

  நைட் டேட்டிங்

  கணவர் கன்யே வெஸ்ட் அரசியலில் ஈடுபடுவது தான் பிளவுக்கு காரணம் என்றும், மகள் பற்றி அவர் பேசியது நெஞ்சையே வெடிக்க வைத்தது என்றெல்லாம் பேசி வந்த கிம் கர்தாஷியன், அடுத்த காதலருக்கு ரூட் போடத்தான் கன்யே வெஸ்ட்டை கழட்டி விட்டுள்ளார் என்கிற தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இருவரும் இரவு நேர டேட்டிங்கின் போது மிகவும் நெருக்கமாக டின்னர் சாப்பிடும் புகைப்படங்களை பகிரங்கமாகவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிம் கர்தாஷியன் ஷேர் செய்துள்ளார்.

  4வது திருமணம்

  4வது திருமணம்

  இதுவரை 3 திருமணங்கள் செய்து விவாகரத்து செய்த நிலையில், ஒவ்வொரு கணவரிடம் இருந்தும் பெரிய தொகையை நிவாரணமாக தனது வழக்கறிஞர் மூலமாக வாதாடியே பல கோடிகளை சேர்த்துள்ளார் கிம் கர்தாஷியன் என கூறுகின்றனர். இந்நிலையில், தனது 4வது திருமணத்துக்கு கிம் கர்தாஷியன் தயாராகி விட்டார் என்றும் அதற்காகத்தான் இப்படி அவரே பீட் டேவிட்ஸன் உடன் டேட்டிங் சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் என்றும் பரபரப்பாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

  English summary
  Kim Kardashian shares night dating photos with Pete Davidson in her instagram page. Recently She divorced her 3rd husband Kanye West and now she plans to do her next marriage with Comedian Pete Davidson.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X