»   »  கழிவறை கட்டிய குடும்பங்களுக்கு இலவச 'கபாலி' டிக்கெட்களை வழங்கும் கிரண்பேடி!

கழிவறை கட்டிய குடும்பங்களுக்கு இலவச 'கபாலி' டிக்கெட்களை வழங்கும் கிரண்பேடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: சொந்தமாக கழிவறை கட்டிய 147 குடும்பங்களுக்கு 450 கபாலி டிக்கெட்டுகளை புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வழங்கவிருக்கிறார்.

புதுவையில் கவர்னராகப் பொறுப்பேற்றது முதல் ஆளுநர் கிரண்பேடி பல அதிரடிகளை செய்து வருகிறார். அதில் ஒன்றாக புதுச்சேரியில் இலவசமாக கழிப்பறை கட்டுபவர்களுக்கு 'கபாலி' டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.கிரண்பேடியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 147 குடும்பங்களில் கழிவறை கட்டப்பட்டுள்ளது. இதனால் சொன்னபடி அந்த குடும்பங்களுக்கு 'கபாலி' டிக்கெட்களை இலவசமாக வழங்கவுள்ளனர்.


ஒரு குடும்பத்துக்கு 3 டிக்கெட் வீதம் சுமார் 450 டிக்கெட்டுகளை இதற்காக முன்பதிவு செய்துள்ளனர். டிக்கெட்டுகளுக்கான ஆன மொத்த பணத்தில் கிரண்பேடி 5௦௦௦ ரூபாய் வழங்கியிருக்கிறார்.


இது தவிர கவர்னர் மாளிகை ஊழியர்களும் தங்களால் முடிந்த பணத்தை வழங்கியுள்ளனர்.

English summary
Puducherry Governor kiran Bedi Give Kabali Free Ticket for 450 Families.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil