»   »  கிருமி மருத்துவப் படம் இல்லையாம்... சீட் நுனியில் உட்கார வைக்கும் காதல் கலந்த த்ரில்லர் படமாம்!

கிருமி மருத்துவப் படம் இல்லையாம்... சீட் நுனியில் உட்கார வைக்கும் காதல் கலந்த த்ரில்லர் படமாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கிருமி என்ற படத்தலைப்பைக் கேட்டதும், மருத்துவம் சார்ந்த படம் என யூகம் எழுவது சகஜம் தான். ஆனால், இப்படம் மருத்துவப் படம் இல்லையாம். தூய காதல் கலந்த த்ரில்லர் கதை தானாம்.

அனு சரண் இயக்கத்தில் மதயானைக்கூட்டத்தில் நடித்த கதிர், ரேஷ்மிமேனன் நடித்துள்ள படம் கிருமி. கிருமி என்ற படத்தலைப்பைக் கேட்டவுடன் இப்படம் ஏதோ சமூகம் சார்ந்த பிரச்சினைகளை முன்னிருத்தப் போகிறது அல்லது மருத்துவம் சார்ந்த கதைக்களம் என்றெல்லாம் எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால், இப்படத்தின் கதைக்களம் அது இல்லையாம். இளைஞர் ஒருவர் தனது வாழ்க்கையில் சந்திக்கும் மாற்றங்கள் தான் கதை. காதல் கலந்த த்ரில்லர் கதைக்களம். இன்றைய இளைஞர்களைப் பிரதிபலிப்பவனாக படத்தின் நாயகன் பாத்திரம் உருவாக்கப் பட்டுள்ளதாம்.

ஆஸ்திரேலியாவில் பல்வேறு குறும்படங்களை இயக்கி பாராட்டுக்களைப் பெற்றவர் அனு சரண். கிருமி அவரது முதல் படம்.

பி.சி.ஸ்ரீராமின் முன்னாள் உதவியாளர் வின்செண்ட் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கே இசையமைக்கிறார்.

இப்படத்தில் சார்லி, வனிதா, டேவிட் சாலமோன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் பின்னணி இசை கோர்ப்பு உள்ளிட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படம் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

English summary
Kirumi is an upcoming tamil thriller film made by a team of young talents.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil