»   »  ஆஸ்கர் தேர்வில் சத்தமில்லாமல் நுழைந்த கன்னடப் படம் "கேர் ஆப் புட்பாத் 2"

ஆஸ்கர் தேர்வில் சத்தமில்லாமல் நுழைந்த கன்னடப் படம் "கேர் ஆப் புட்பாத் 2"

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: எல்லோரும் மராத்தியப் படமான கோர்ட் மட்டும் தான் இந்தமுறை இந்தியாவில் இருந்து ஆஸ்கர் தேர்விற்கு தேர்வாகி இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் சத்தமில்லாமல் ஒரு கன்னடப் படமும் இந்த ஆஸ்கர் வரிசையில் தற்போது இணைந்து இருக்கிறது. முன்னாள் நடிகையும் , அரசியல்வாதியுமான ஹேமமாலினி இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

ஹேமமாலினியின் மகள் ஈஷா தியோலின் நடிப்பில் வெளிவந்த கேர் ஆப் புட்பாத் 2 என்ற கன்னடப் படம் தான், இந்த சாதனையைப் புரிந்திருக்கிறது.

கேர் ஆப் புட்பாத்

கேர் ஆப் புட்பாத்

2006 ம் ஆண்டில் வெளிவந்த கேர் ஆப் புட்பாத் திரைப்படம் உலகளவில் கவனத்தைக் கவர்ந்தது. காரணம் கிஷான் ஸ்ரீகாந்த் என்ற 10 வயது சிறுவன் இயக்குனராக மாறியது இந்தப் படத்தின் மூலமாகத் தான். கன்னடம் தவிர்த்து, மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, ஒரியா மற்றும் தமிழ் மொழிகளில் வெளியானது இந்தப் படம்.

கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை

இந்தப் படத்தின் மூலம் உலகின் மிக இளவயது இயக்குநர் என்ற வரலாற்றைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார் கிஷான் ஸ்ரீகாந்த்.வெறும் 55 நாட்களில் மொத்தப் படத்தின் படப்பிடிப்பையும் நடத்திய கிஷான், இந்தப் படத்தின் கதை மூலமாக உலகளவில் பலரின் கவனத்தையும் தன்மீது விழச் செய்தார்.

தேசிய விருது

தேசிய விருது

54 வது தேசியத் திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகள் திரைப்படம் என்ற பிரிவில் விருதைப் பெற்றது கேர் ஆப் புட்பாத். மேலும் சுமார் 2 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 27 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்தது.

கேர் ஆப் புட்பாத் 2

கேர் ஆப் புட்பாத் 2

10 வருடங்கள் கழித்து தனது 19 வது வயதில் கேர் ஆப் புட்பாத் படத்தின் 2 வது பாகத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் கிஷான் ஸ்ரீகாந்த்(19). இந்தப் படத்தில் ஈஷா தியோல் மற்றும் அவிகா கோர் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

கோர்ட்

கோர்ட்

ஆஸ்கர் தேர்வில் ஏற்கனவே காக்கா முட்டை மற்றும் பாகுபலி போன்ற தென்னிந்தியத் திரைப்படங்களை ஓரங்கட்டி மராத்தியத் திரைப்படமான கோர்ட் நுழைந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது தென்னிந்தியத் திரைப்படமான கேர் ஆப் புட்பாத் 2 திரைப்படமும் ஆஸ்கர் தேர்வில் நுழைந்து இருக்கிறது.

லேட்டாக

ஆஸ்கர் தேர்வில் லேட்டாக நுழைந்ததால் இந்தப் படம் அதிகளவில் வெளியே தெரியாமல் இருந்தது. ஆனால் நடிகை ஹேமமாலினி தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் ஆஸ்கர் என்ட்ரி குறித்து அறிவித்திருக்கிறார். ஹேமமாலினியின் மூத்த மகள் ஈஷா தியோல் இந்தப் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக

முதன்முறையாக

கன்னடத் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக ஒரு கன்னடப் படம் ஆஸ்கர் பிரிவில் உள்ளே நுழைந்திருக்கிறது. இந்தப் படத்தில் ஈஷா தியோல் நீதிக்காக போராடும் ஒரு இளம் வழக்கறிஞராக நடித்திருக்கிறார். இந்தியளவில் நவம்பர் மாதம் கேர் ஆப் புட்பாத் 2 திரைப்படம் வெளியாகவிருக்கிறது.

ஹிந்தியிலும்

இந்தப் படம் கில் தெம் யங் என்ற பெயரில் ஹிந்தியிலும் வெளியாகவிருக்கிறது. இந்தியாவில் படம் வெளியாவதற்கு முன்பு அக்டோபர் மாதம் படத்தின் பிரீமியர் ஷோ லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அமெரிக்காவில் வெளியிடப்பட விருக்கிறது. ஹாலிவுட் ஸ்டைலில் இந்தப் படத்தின் பிரீமியர் ஷோ வெளியிடப்படும் என்று ஹேமமாலினி தெரிவித்து இருக்கிறார்.

காக்கா முட்டை இழந்ததை கன்னடப் படம் பெற்றுத் தருமா? பார்க்கலாம்...

English summary
After Court Movie Now Actress Esha Deol starrer Kannada film ‘Care Of Footpath 2′ has been selected as a lateral entry for the Oscar 2016 Race. "Wonderful news which I must share with all of u! Esha's bilingual movie in Kannada & Hindi has made a lateral entry into the 2016 Oscars" Says Actress Hema Malini.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil