»   »  என் குழந்தையை கொன்றார், கெரியரை நாசமாக்கினார்: முன்னாள் கணவர் மீது நடிகை மீண்டும் புகார்

என் குழந்தையை கொன்றார், கெரியரை நாசமாக்கினார்: முன்னாள் கணவர் மீது நடிகை மீண்டும் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:

கிஷோர் சத்யா என் குழந்தையை கொன்றார், என் சினிமா கெரியரை நாசமாக்கினார் என்று நடிகை சார்மிளா குற்றம் சாட்டியுள்ளார்.

இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தான நடிகை சார்மிளா தனது முதல் கணவரான தொலைக்காட்சி தொடர் நடிகர் கிஷோர் சத்யா மீது பரபரப்பு புகார் தெரிவித்தார்.

கிஷோர் தனது வாழ்க்கையை நாசமாக்கியதாக கூறினார்.

கிஷோர்

கிஷோர்

சார்மிளாவின் குற்றச்சாட்டை கிஷோர் மறுத்துள்ளார். மேலும் சார்மிளா தனக்கு எப்பொழுதுமே மனைவி இல்லை என்றும், மது-போதைப் பொருட்களுக்கு அடிமை என்றும் கூறியுள்ளார்.

சார்மிளா

சார்மிளா

கிஷோர் அளித்துள்ள பேட்டியை பார்த்த சார்மிளா கோபம் அடைந்துள்ளார். கிஷோர் என் குழந்தையை கொன்று, என் கெரியரை நாசமாக்கிவிட்டார். இது போதவில்லையாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

திருமணம்

திருமணம்

நான் கிஷோரை கடந்த 1995ம் ஆண்டு திருமணம் செய்தேன். நான் பிரமாண்டமாக திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் செய்திருப்பேன். நான் ஏன் அவரை மிரட்ட வேண்டும் என்கிறார் சார்மிளா.

கோழை

கோழை

நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினால் திருமணத்திற்கு சம்மதிக்கும் அளவுக்கு அவர் கோழையா? கிஷோர் என்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தினார் என சார்மிளா தெரிவித்துள்ளார்.

கர்ப்பம்

கர்ப்பம்

நான் கர்ப்பமானதும் அவர் கோபப்பட்டார். குழந்தையை கொல்ல அவர் என்னன்னவோ செய்தார். இறுதியில் நான் கேரளாவுக்கு வந்து கருவை கலைக்க வேண்டியதாகிவிட்டது. அவரின் குடும்பத்தால் தான் இதுவரை நான் அமைதியாக இருந்தேன். அவரால் நான் வாழ்க்கையை தொலைத்துவிட்டேன் என்று சார்மிளா கூறியுள்ளார்.

English summary
Actress Charmila has accused her first husband TV actor Kishore Sathya of killing her child and destroying her career.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil