»   »  அவர் என் மனைவியே இல்லை, மது, போதைக்கு அடிமை: நடிகை மீது முன்னாள் கணவர் புகார்

அவர் என் மனைவியே இல்லை, மது, போதைக்கு அடிமை: நடிகை மீது முன்னாள் கணவர் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சார்மிளா எப்பொழுதுமே என் மனைவி இல்லை. அவர் மது மற்றும் போதைப் பொருளுக்கு அடிமை என்று நடிகர் கிஷோர் சத்யா தெரிவித்துள்ளார்.

தனது வாழ்க்கையை தனது முன்னாள் கணவரான டிவி நடிகர் கிஷோர் சத்யா நாசமாக்கிவிட்டதாக நடிகை சார்மிளா தெரிவித்துள்ளார். ஆனால் கிஷோர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் மலையாள மீடியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,

சார்மிளா

சார்மிளா

சார்மிளா எப்பொழுதும் என் மனைவி இல்லை. இரு மனம் ஒத்துப் போனால் தான் அதற்கு பெயர் திருமணம். எங்க விஷயமே வேறு. அடிவாரம் படப்பிடிப்பு நடந்தபோது சார்மிளா மனஅழுத்தத்தில் இருந்தார். அதனால் அவரை சகஜ நிலைக்கு கொண்டு வர மொத்த படக்குழுவும் முயற்சி செய்தது.

காதல்

காதல்

அடிவாரம் படப்பிடிப்பின்போது சார்மிளாவுக்கு என் மீது காதல் ஏற்பட்டது. நான் அவருக்கு புரபோஸ் செய்ததே இல்லை. தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் என்னிடம் கெஞ்சினார்.

மிரட்டல்

மிரட்டல்

சார்மிளாவை திருமணம் செய்ய முடியாது என்று நான் கூறியவுடன் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார். அதனால் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டேன்.

ஷார்ஜா

ஷார்ஜா

அப்பொழுது எனக்கு 22 வயது, ஷார்ஜாவில் வேலை கிடைத்தது. அவர் ஷார்ஜாவுக்கு வந்த பிறகே அவருக்கு குடிப்பழக்கம் மற்றும் போதைப்பழக்கம் உள்ளது தெரிய வந்தது.

போதை

போதை

அவர் போதைக்கு அடிமையாகியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இதையடுத்து அவரை விவாகரத்து செய்யுமாறு என் பெற்றோர் கூறினார்கள்.

பூஜா

பூஜா

கேரளாவுக்கு திரும்பி வந்து பூஜாவை திருமணம் செய்தேன். நான் பூஜாவை மணந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. எங்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சார்மிளா என்னையும், என் குடும்பத்தையும் நாசமாக்க இப்படி குற்றம் சாட்டுகிறார்.

English summary
Actor Kishore Sathya has denied actress Charmila's allegation that he spoiled her life.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil