»   »  'விழுப்புரம் டூ டெல்லி'.. இறந்தும் தேசிய விருதை வென்ற கிஷோரின் கலைப்பயணம்

'விழுப்புரம் டூ டெல்லி'.. இறந்தும் தேசிய விருதை வென்ற கிஷோரின் கலைப்பயணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விசாரணை படத்தின் சிறந்த படத்தொகுப்புக்காக மறைந்த படத்தொகுப்பாளர் கிஷோர் தேசிய விருதை வென்றிருக்கிறார்.

ஏற்கனவே ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது வென்ற கிஷோர், தற்போது 2 வது முறையாக தேசிய விருதைக் கைப்பற்றியுள்ளார்.

2 வது தேசிய விருதின் மூலம் இறந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும், கிஷோரின் கலைப்பயணம் குறித்து இங்கே பார்க்கலாம்.

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்த கிஷோர் எந்தவித பின்னணியும் இல்லாமல் சினிமாவிற்கு வந்தவர். விடி.விஜயன், பி.லெனின் ஆகியோரிடம் உதவியாளராகப் பணிபுரிந்திருக்கிறார். சினிமாவில் உதவியாளராக வாழ்க்கையைத் தொடங்கியபோது கிஷோரின் வயது 21.

ஈரம்

ஈரம்

தமிழ், இந்தி, தெலுங்கு என்று பாரபட்சம் பாராமல் பல மொழிகளிலும் பணியாற்றிய கிஷோர், அறிவழகனின் ஈரம் மூலம் படத்தொகுப்பாளராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். ஷங்கர் தயாரிப்பில் வெளியான ஈரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் கிஷோரின் படத்தொகுப்பு பல தரப்பிலும் அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.

ஆடுகளம்

ஆடுகளம்

படத்தொகுப்பாளராக தன்னுடைய 4 வது படத்திலேயே கிஷோர் தேசிய விருதை வென்றுவிட்டார். சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த படத்தொகுப்பு என 6 விருதுகளை வென்ற ஆடுகளம் படத்தின் சிறந்த படத்தொகுப்பாளர் விருது கிஷோருக்கு கிடைத்தது.

சவாரி

சவாரி

ஈரம் தொடங்கி நெடுஞ்சாலை, உதயம் என்ஹெச்4, காஞ்சனா, காஞ்சனா 2, விசாரணை, காக்கா முட்டை என்று சுமார் 74 படங்களுக்கு கிஷோர் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார். கிஷோரின் படத்தொகுப்பில் கடைசியாக வெளியான படம் சவாரி.

சிறிய படம், பெரிய படம்

சிறிய படம், பெரிய படம்

தேசிய விருதை வென்றாலும் பணிபுரிந்த காலத்தில் சிறிய படம் ,பெரிய படம் என்று கிஷோர் பிரித்துப் பார்த்தது கிடையாதாம். மேலும் சம்பளம் இவ்வளவு வேண்டும் என்று கேட்காமல் கொடுப்பதை வாங்கிக்கொள்ளும் குணமும் கிஷோருக்கு இருந்திருக்கிறது. தன்னுடைய நேர்த்தியான படத்தொகுப்பால் பல புதிய இயக்குனர்களுக்கு வாழ்க்கை கொடுத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

விஸ்வரூபம்

விஸ்வரூபம்

கைநிறைய படங்கள் இருந்த காரணத்தால், கமல்ஹாசன் தன்னுடைய விஸ்வரூபம் படத்தில் பணியாற்றக் கூப்பிட்ட போது அதனை மறுத்து விட்டாராம். பார்ட்டி, பப் என்று எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாமல் இருந்த கிஷோர் மிகுந்த மன அழுத்தம் காரணமாக, கடந்த மார்ச் 6ம் தேதி இறந்து போனார்.

விசாரணை

விசாரணை

2 வது முறையாக அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்த விசாரணை படத்தின் பணிகளின் போது தான் கிஷோர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். தொழிலில் 'மிஸ்டர் கிளீன்' என்று பெயரெடுத்த கிஷோர் தன்னுடைய 36 வயதிலேயே இறந்து போனது, சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கிஷோரைப் பற்றித் தெரிந்தவர்கள் பலரும், அவரின் தொழில் பக்திக்கு சாட்சியாகவே இந்த தேசிய விருது கிடைத்திருப்பதாக கூறுகின்றனர்.

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்பது இதுதானோ..

English summary
Editor Kishore's Artistic Journey of Tamil Cinema.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil