பேட்ட பற்றி ட்வீட் போட்ட ரஜினி பிஆர்ஓ: தரமான கேள்வி கேட்ட கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ்
சென்னை: பேட்ட படம் குறித்து ட்வீட்டிய ரஜினியின் பி.ஆர்.ஓ.விடம் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் கேள்வி ஒன்றை கேட்டுள்ளது.
ரஜினிகாந்தின் பேட்ட படமும், அஜித்தின் விஸ்வாசம் படமும் ஒரே நாளில் வெளியாகி நன்றாக ஓடிக் கொண்டிருக்கின்றன. தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பேட்ட படத்தை விட விஸ்வாசத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
தியேட்டர்கள்
தமிழகத்தில் மட்டும் பேட்டக்கு 600க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்கள் கிடைத்துள்ளன. மேலும் இரண்டாவது நாளில் மேலும் பல ஸ்கிரீன்கள் பேட்டக்கு மாறியுள்ளன என்று ரஜினியின் பி.ஆர்.ஓ. ட்வீட் செய்தார்.
கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ்
ரஜினி பி.ஆர்.ஓ. போட்ட ட்வீட்டை பார்த்த விஸ்வாசம் படத்தின் தமிழக உரிமையை பெற்ற கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளது. அது கேட்டிருப்பதாவது, தமிழக மக்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு உண்மை தெரியும். ஏன் தேவையில்லாமல் போட்டி மற்றும் பிரச்சனையை உருவாக்குகிறீர்கள்? தமிழக வசூல் நிலவரத்தை பாருங்கள் என்று தெரிவித்துள்ளது.
பாராட்டு
கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் போட்ட ட்வீட்டை பார்த்த அஜித் ரசிகர்கள் அதை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த படம்
அஜித்தின் அடுத்த படத்தையும் வினியோகிக்குமாறு கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸை ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











