»   »  உயிருக்கு உயிராய் நேசித்த மகனை விட்டு சென்றுவிட்டீரே முத்துக்குமாரா: கோ 2 இயக்குனர்

உயிருக்கு உயிராய் நேசித்த மகனை விட்டு சென்றுவிட்டீரே முத்துக்குமாரா: கோ 2 இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் பாடல் ஆசிரியர் நா. முத்துக்குமாரை சரஸ்வதி புத்திரா என்று தான் அழைப்பேன் என கோ 2 பட இயக்குனர் சரத் தெரிவித்துள்ளார். முத்துக்குமாருக்கு அவரது மகன் என்றால் உயிர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாடல் ஆசிரியர் நா. முத்துக்குமாரின் திடீர் மரணத்தால் அதிர்ச்சி அடைந்த திரையுலகினரால் அதில் இருந்து மீண்டு வர முடியவில்லை. அவ்வளவு என்ன அவசரம் உங்களுக்கு என்று தான் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் முத்துக்குமார் பற்றி கோ 2 பட இயக்குனர் சரத் கூறியிருப்பதாவது,

சரஸ்வதி புத்திரா

சரஸ்வதி புத்திரா

நா. முத்துக்குமார் அருமையான பாடல் ஆசிரியர். நான் அவரை எப்பொழுதுமே சரஸ்வதி புத்திரா என்று தான் அழைப்பேன். அவரை காரில் சென்னையில் இருந்து நெல்லூருக்கோ அல்லது கேரளா எல்லை வரையிலோ அழைத்துச் சென்று திரும்பி வாருங்கள். அது போதும் அந்த நேரத்திற்குள் அவர் 5 பாடல்களை எழுதிவிடுவார்.

நல்ல பழக்கம்

நல்ல பழக்கம்

அர்த்தம் புதைந்த வார்த்தைகளின் தொழிற்சாலை அவர். பில்லா 2 நாட்களில் இருந்தே எனக்கு அவரை தெரியும். அவர் தான் பில்லா 2 படத்திற்கான அனைத்து பாடல்களையும் எழுதியவர்.

வைரங்கள்

வைரங்கள்

கோ 2 படத்தில் அவர் 3 பாடல்களை எழுதிக் கொடுத்தார். மூன்றுமே வைரங்கள். வைரம் என்றும் இருப்பதை போன்றே அவரது பாடல்களும் என்றும் நிலைத்திருக்கும். அவரின் மரண செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

மகன்

மகன்

முத்துக்குமாரின் மகனை நினைத்து தான் எனக்கு கவலையாக உள்ளது. அவருக்கு மகன் என்றால் உயிர். எங்கு சென்றாலும் உடன் அழைத்துச் செல்வார். அவரின் மகனுக்கு கடவுள் தான் தைரியத்தையும், நம்பிக்கையையும் அளிக்க வேண்டும். முத்துக்குமாரின் மகன் வாழ்வில் நல்ல நிலைக்கு வர கடவுள் அவரை ஆசிர்வதிப்பாராக.

English summary
Ko 2 director Sarath Mandava said that he is worried about lyricist Na. Muthukumar's son.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil