»   »  ஓட்டுப் போடுங்க..'கோ 2' படத்தை இலவசமா பாருங்க!

ஓட்டுப் போடுங்க..'கோ 2' படத்தை இலவசமா பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓட்டுப் போட்டால் 'கோ 2' படத்தின் 2 டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என படக்குழு விளம்பரம் செய்திருக்கிறது.

பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'கோ 2'. சரத் இயக்கியிருக்கும் இப்படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார்.

இந்நிலையில் மே 16 ல் ஓட்டுப் போட்டால் 2 டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என புதுமையான முறையில் இப்படத்தை படக்குழு விளம்பரப்படுத்தி வருகிறது.

''மே 16 அன்று வாக்களிப்பவர்கள், வாக்களித்த விரல் மையுடன் ஒரு செல்பி மற்றும் உங்கள் முகவரியை 8682888038 என்கிற எண்ணுக்கு வாட்ஸப் அனுப்பினால் குலுக்கல் முறையில் 500 வாக்காளர்களுக்கு கோ 2 படத்துக்கான இரண்டு டிக்கெட்டுகள் வீடு தேடி வரும்'' என்று கூறியுள்ளனர்.

வருகின்ற 13ம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியாகிறது.

English summary
Ko 2 Team Announced Free Ticket Contest.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil