»   »  வெளியானது கோ 2 படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்

வெளியானது கோ 2 படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2011 ம் ஆண்டு இயக்குநர் கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் வெளியான மெகா ஹிட் திரைப்படம் கோ. நடிகர்கள் ஜீவா, அஜ்மல் மற்றும் நடிகை கார்த்திகா நடித்து வெளிவந்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

முதல் பாகத்தில் நடித்த பிரகாஷ் ராஜ் மட்டுமே இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார், மற்ற அனைத்து நடிகர்களுமே புதிதாக படத்தில் நடிக்கின்றனர். படத்தின் நாயகனாக பாபி சிம்ஹா, நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கும் இந்தப் படத்தை, முதல் பாகத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடேயின்மென்ட் நிறுவனமே தயாரிக்கிறது.கோ 2 படத்தை சரத் என்பவர் இயக்கி வருகிறார், படத்திற்கு இசை லியோன் ஜேம்ஸ். கோ 2 படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியான நிலையில் இன்று படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகியது.


பிரகாஷ்ராஜ் சேரில் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருக்க, அருகில் கையைக் கட்டிக் கொண்டு ஸ்மார்ட்டாக நிற்கிறார் பாபி சிம்ஹா. இன்று வெளியாகிய இந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.

English summary
Ko 2 Movie First Look Motion Poster Released Today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil