»   »  அரசியல் திரில்லராக உருவாகும் கோ 2

அரசியல் திரில்லராக உருவாகும் கோ 2

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2011 ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் கோ. இயக்குநர் கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் ஜீவா, கார்த்திகா, அஜ்மல் மற்றும் பிரகாஷ்ராஜ் நடிப்பில், ஒரு அரசியல் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வெளிவந்து ரசிகர்களைக் கவர்ந்தது கோ.

மீண்டும் 4 வருடங்கள் கழித்து கோ படத்தின் 2ம் பாகத்தை தற்போது எடுத்து வருகின்றனர். கோ முதல் பாகத்தில் நடித்த பிரகாஷ் ராஜ் தவிர வேறு யாரும் கோ 2 படத்தில் நடிக்கவில்லை.


முதல் பாகத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனமே 2 ம் பாகத்தையும் தற்போது தயாரிக்கிறது. கோ 2 படம் அரசியலின் உண்மைகளை எடுத்துக் கூறும் ஒரு படமாக இருக்கும் என்று படத்தின் இயக்குநர் சரத் கூறியுள்ளார்.


கோ – ஜீவா- கே.வி.ஆனந்த்

கோ – ஜீவா- கே.வி.ஆனந்த்

2011 ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற கோ திரைப்படம், படத்தின் நாயகன் ஜீவா மற்றும் இயக்குநர் கே.வி.ஆனந்த் இருவருக்குமே ஒரு மாபெரும் வெற்றியைப் பரிசளித்தது. காட்சிகளை விறுவிறுப்புடன் அமைத்து படத்தை ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் ஆக எடுத்திருந்தார் கே.வி.ஆனந்த். நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நாயகியாக அறிமுகமானது இந்தப் படத்தில்தான். 2011 ம் ஆண்டின் மாபெரும் வெற்றிப் படங்களில் கோ வும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


கோ 2

கோ 2

4 வருடங்கள் கழித்து தற்போது கோ படத்தின் 2 ம் பாகத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார்கள்.ஆனால் முதல் பாகத்தில் நடித்த பிரகாஷ்ராஜ் தவிர மற்ற அனைவருமே இந்தப் படத்தில் புதிதாக இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதுமுக இயக்குநர் சரத் இயக்கத்தில் பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.


2 தேசிய விருது பெற்ற நடிகர்கள்

2 தேசிய விருது பெற்ற நடிகர்கள்

கோ 2 படத்தில் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா என்று 2 தேசிய விருது பெற்ற நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். இதனால் நடிப்பில் அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான போட்டி படத்தில் நிலவுகிறதாம்.


அரசியலின் நிஜத்தை எடுத்துரைக்கும்

அரசியலின் நிஜத்தை எடுத்துரைக்கும்

கோ 2 படத்தின் இயக்குநர் சரத் கோ 2 படம் அரசியலின் உண்மையான முகத்தை எடுத்துக் கூறும் விதமாக இருக்கும். மேலும் அரசியல் வாழ்க்கையின் நிழல்களை எடுத்துக் கூறும் ஒரு திரில்லர் படமாகவும் கோ 2 இருக்கும் என்று கூறியுள்ளார். கோ 2 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


English summary
Ko 2 Movie- political Suspense Thriller.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil