twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரசியல் பேசும் தமிழ் சினிமாக்கள்...மக்களிடம் எடுபட்டதா...ஸ்பெஷல் ரவுண்டப்

    |

    சென்னை : தமிழ் சினிமாவில் பல வகையான கதைகள் கொண்ட படங்கள் வெளி வந்துள்ளன. அவற்றில் ஒரு சில படங்கள் மட்டுமே அரசியல் சார்ந்த கதைகளாக உள்ளன. சில படங்கள் வெற்றியும் அடைந்துள்ளன.

    7 ஆண்டு கால காதல் திருமணம் முடிவுக்கு வந்தது.. விவாகரத்து நோட்டீஸ் கொடுத்த கிம் கர்தாஷியன்!7 ஆண்டு கால காதல் திருமணம் முடிவுக்கு வந்தது.. விவாகரத்து நோட்டீஸ் கொடுத்த கிம் கர்தாஷியன்!

    கடந்த 10 ஆண்டுகளில் வெளிவந்த அரசியல் பின்புலம் கொண்ட கதைகளில், 5 படங்கள் மட்டுமே ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. சில படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. இந்த படங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    கோ

    கோ

    அரசியல் திரில்லர் கதையாக 2011 ம் ஆண்டு வெளிவந்த படம் கோ. ஜீவா, கார்த்திகா நாயர், அஜ்மல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளைஞர் ஒருவர் தமிழக முதல்வராக வேண்டும் என்வதற்காக செய்யும் சதிகளை சொல்லும் இப்படத்தை டைரக்டர் கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார். அரசியல் சூழ்ச்சிகளை சொல்லும் இப்படம் சூப்பர்ஹிட் ஆனது. இப்படத்தின் இரண்டாம் பாகம் 2016 ல் வெளியானது.

    உரியடி

    உரியடி

    அறிமுக இயக்குனரான விஜயகுமார் இயக்கிய இப்படம் ஜாதி அடிப்படையிலான அரசியல் படமாக உருவாக்கப்பட்ட படம் உரியடி. இதில் டைரக்டர் விஜயகுமாரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். பலமான வசனங்களுடன் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ் சினிமாவின் சிறந்த அரசியல், த்ரில்லர் படமாக அமைந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் பலவிதமான விஷயங்கள் பற்றி விளக்கி இருந்தார் டைரக்டர்.

     நோட்டா

    நோட்டா

    2018 ல் வெளியான அரசியல், த்ரில்லர் படம் நோட்டோ. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் எடுக்கப்பட்ட இப்படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்திருந்தார். ஆனந்த் ஷங்கர் இப்படத்தை இயக்கி இருந்தார். இரு மாநிலங்களின் அரசியல் நிகழ்வுகளுக்கு ஏற்றவாறு இப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்திற்கு வரவேற்பு, எதிர்ப்பு என பல விதமான விமர்சனங்கள் கிடைத்தன.

    தலைவி

    தலைவி

    அதிகம் எதிர்பார்க்கப்படும், மறைந்த தமிழக முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கையை கூறும் படம் தலைவி. எல்.ஏ.விஜய் இப்படத்தில் ஜெயலலிதா பற்றிய பல அரசியல் சுவாரஸ்யங்களை கூறி உள்ளார். விரைவில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இப்படத்தில் நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதா வேடத்தில் நடித்துள்ளார். இதற்காக தனது தோற்றங்களை பலவிதமாக அவர் மாற்றிக் கொண்டுள்ளார்.

    மாநாடு

    மாநாடு

    சிலம்பரசன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் படம் மாநாடு. இதுவும் அரசியல் த்ரில்லர் கதை தான். இப்படத்தில் முதல் முறையாக இஸ்லாமிய இளைஞர் வேடத்தில் சிம்பு நடிக்கிறார். நாட்டின் சில பகுதிகளில் இஸ்லாமியர்கள் மீதான பார்வையை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் சிம்பு நடித்துள்ள படம். சமூகத்திற்காக போராடும் இளைஞராக நடித்துள்ள சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷினி நடித்துள்ளார்.

    English summary
    Have a look at the five Tamil films from 'Ko' to 'Maanadu' that are based on political backdrop.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X