»   »  ஓபிஎஸ்ஸுக்கும் இந்த கோ 2 படத்துக்கும் என்ன சம்பந்தம்?

ஓபிஎஸ்ஸுக்கும் இந்த கோ 2 படத்துக்கும் என்ன சம்பந்தம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாபி சிம்ஹா, நிக்கி கல்ரானி, பால சரவணன், பிரகாஷ் ராஜ், இளவரசு நடிப்பில் இன்று (மே 13) வெளியாகியிருக்கும் படம் ‘கோ-2'.

இதில், தமிழக முதல்வராக பிரகாஷ் ராஜும், உள்துறை அமைச்சராக இளவரசும் நடித்துள்ளனர்.


Ko2 and O Panneerselvam

இளவரசின் தோற்றம், அதிமுகவின் ஓ.பி.எஸ். தோற்றத்தை ஜெராக்ஸ் எடுத்தது போலவே அமைக்கப்பட்டுள்ளதாம். காதோர நரை, நெற்றியில் திருநீறு, அதன்கீழ் குங்குமக் கீற்று என அச்சு அசல் ஓ.பி.எஸ். போலவே இருக்கிறார் இளவரசு. சாதாரண மக்கள் பார்த்தால் கூட அது ஓ.பி.எஸ்தான் என்று சொல்லும்படி கனக்கச்சிதமாக மேக்கப் போட்டிருக்கிறார்கள்.


கதைப்படி, தன் வெற்றி செல்லாது என்று வழக்கு தொடுத்திருக்கும் தியாகி குமாரசாமியை (நாசர்), உயிருடனே தன்னுடைய பண்ணை வீட்டில் புதைத்து விடுகிறார் இளவரசு. தன் அப்பாவைக் காணவில்லை, இளவரசு காரணமாக இருக்கலாம் என்று போலீஸில் புகார் கொடுக்க வரும் நாசரின் மகனையும் கொன்றுவிடுகிறார்கள் இளவரசுவின் மகனும், அவன் நண்பனும்.


அத்துடன், ‘இவருக்குப் பிறகு நான் தான் அடுத்த முதல்வர்', ‘முதல்வர் இல்லேன்னா அவரோட நாற்காலியில உக்காந்துடுவியா' போன்ற வசனங்களும் ஓ.பி.எஸ்ஸையே குறிப்பிடுவதாகச் சொல்கிறார்கள் படம் பார்த்தவர்கள். தேர்தல் நேரத்தில் இந்தப் படம் ரிலீஸாகியிருப்பதால், ஓ.பி.எஸ்ஸின் வெற்றியை இது பாதிக்குமா? என்று சந்தேகத்தைக் கிளப்பியுள்ளன சில மீடியாக்கள்.


படத்துக்கும் விளம்பரம், ஓபிஎஸ்ஸுக்கும் ஒரு நெகட்டிவ் விளம்பரம் போல!

Read more about: ko 2, கோ 2
English summary
In what way Ko 2 is affecting the success of Minister O Panneerselvam in coming election.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil